பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2014

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு.


பணி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜி.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: வேலூரில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஜூலை மாதம் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு உச்சநீதி மன்றம் சாதகமான தீர்ப்பை அளித்தது.

அதன்படி 9 ஆண்டுகள் தாற்காலிகமாக ரூ.1000 ஊதியத்திலும், நான்கரைஆண்டுகள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான முறையான ஊதியத்திலும், பணியாற்றி 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ள காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரத்து செய்யப்பட்ட பதிவை புதுப்பித்து மீண்டும் எங்களை மட்டும் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்து எங்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கோரிக்கை வைப்பது எனவும், வரும் மக்களவைத் தேர்தலில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதோடு, நண்பர்களிடம் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

1 comment:

  1. Pesama neenga oru arasiyal katchi arambikalam ,
    Eduku munnadi DMK ku support panenga , eppo ADMK ku support paneernga , epadi yanalum neenga NALANI CHIDAMBARAM soonga madhri BDT's ( Back Door Teachers ) thanna.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி