உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2014

உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு.


2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணியநேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .

அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய Seniority -ஐ வழங்க வேண்டும்

2) 01.01.2012 Panel-லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் (மூன்று வருட பட்டபடிப்பு) நிலையிறக்கம் செய்ய வேண்டும்

3) 01.01.2013 Panel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை Panel-ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும்.

அதுவரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.எனவே 01.01.2012-Panel-ன் மூலம் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம்) நிலை உருவாகி உள்ளது. 01.01.2013 Panel மற்றும் 01.01.2014 Panel-இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது.

ஓராண்டு பட்டம் பெற்றவர்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி