ஆஸ்திரேலியா அகுஸ்டா கடற்கரையில் கரை ஒதுங்குவது? மர்மமான மலேசிய விமானமா.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2014

ஆஸ்திரேலியா அகுஸ்டா கடற்கரையில் கரை ஒதுங்குவது? மர்மமான மலேசிய விமானமா..


மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.
48 நாட்கள் தேடுதல் வேட்டையிலும் அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. மலேசிய விமானம் MH370 மாயமாய் மறைந்து போய் இன்றோடு 46 நாட்கள் ஆகின்றது.இதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதை மீடக பயன்படுத்தபட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலேசிய விமானத்தின் பாகங்களை மீட்க ஆஸ்திரேலியா திட்டமிட்டு உள்ளது.இந்த நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அகுஸ்டா என்ற நகரின் கடற்கரையில் இன்று அதிகாலை வாக்கிங் சென்றவர்கள் மூன்று மர்ம பொருட்கள் கடற்கரையில் ஒதுங்கியிருந்ததை பார்த்து காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த பொருட்கள் உடைந்த கார் போன்று தெரிந்தாலும், அது மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.அது போல் பூஸ்டன் கடற்கைரையில் போலீஸ் நிலையம் அருகேயும் பொருட்கள் ஒதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது.அகுஸ்டா என்ற நகரம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 190 மைல்கள் தூரத்தில் உள்ளது. பெர்த் நகரில் இருந்து 1500 கி.மீ தூரத்தில் உள்ள கடல்பகுதியில்தான் விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பதாக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கூறப்பட்டது.

மேலும் ஆஸ்திரேலிய கடல்பகுதியில்தான் விமானத்தின் கருப்புப்பெட்டியின் சிக்னல் கிடைப்பதாகவும் தகவல்கள் வந்தன. தற்போது கிடைத்துள்ள இந்த புதிய தகவலால் விமானம் குறித்த உண்மையான தகவல்கள் விரைவில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி