தேர்தல் பணிச் சான்றிதழ் வழங்காததால் ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2014

தேர்தல் பணிச் சான்றிதழ் வழங்காததால் ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல்...


தேர்தல் பணி தொடர்பாக வாக்குச் சாவடிக்கு வந்த ஆசிரியர்கள் சிலருக்கு தேர்தல் பணிச் சான்றிதழ் (Election Duty Certificate) வழங்காததால் பணிக்கு வந்த ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்களவைக்கான பொதுத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், துணை நிலை ராணுவத்தினை தேர்தல் ஆணையம் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.ஒரு மக்களவைத் தொகுதியிலிருந்து வேறு ஒரு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக செல்பவர்கள் தபால் ஓட்டு (Postal Vote) வழங்கப்படும்.

ஒரு மக்களவைத் தொகுதிக்குள்பட்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு எந்த சட்டமன்றத் தொகுதியில், எந்த வாக்குச் சாவடியில் அவர்கள் தேர்தல் பணியினை மேற்கொள்கிறார்களோ அவர்கள் அந்த வாக்குச் சாவடியிலேயே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தங்களது வாக்கினை செலுத்த முடியும். இதற்கானச் சான்று தான் தேர்தல் பணிச் சான்று.புதன்கிழமை பிற்பகலில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்தல் பணிக்காக சிவகங்கை மக்களவைத் தொகுதியின் வெவ்வேறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து வந்த ஆசிரியர்கள் பலருக்கு இந்தச் சான்று வழங்கப்படவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் சான்றிதழ் கிடைக்காத ஆசிரியர்கள் கூறியதாவது:-வாக்களிப்பதன் கடமை மற்றும் அவசியத்தை வலியுறுத்தி புதிய வாக்காளர்களான மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி படிவத்தை வழங்கி, அதில் கையெழுத்து பெற்றுள்ளோம். ஜனநாயகக் கடமையை வலியுறுத்தும் எங்களில் சிலருக்கே வாக்களிக்க மறுக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இது குறித்து தேர்தல் தொடர்பான அலுவலர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்தனர்.தேர்தல் பணிக்காக வந்த அலுவலர்கள் வாக்களிக்க வகை செய்யும் சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து தேர்தல் தொடர்பான அலுவலர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-தேர்தல் பணிக்கு வந்த அலுவலர்கள் சிலரின் சான்றிதழ்கள் வேறு சாவடிக்கு மாறிச் செல்ல வாய்ப்பு உள்ளது. யார் யாருக்கு இது போன்ற சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற பெயர் பணிக்கு வந்த அலுவலர்களிடம் கேட்டு அவை குறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியினை கவனிக்க வரும் மண்டல அலுவலரிடம் இது குறித்து தெரிவித்து சான்றிதழ் கிடைக்க உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.வியாழக்கிழமை மாலை தேர்தல் முடிவதற்குள் இந்த சான்றிதழ் கிடைக்காவிட்டால் தேர்ல் பணிக்கு வந்த அலுவலர்களால் வாக்களிக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி