கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம்


"மக்களவைத் தேர்தல் முடியும் வரை, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பெறப்பட்ட கல்வி கடனுக்கான வட்டித் தொகை, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.2,600 கோடியாக உள்ளது என்றும், அதனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், மக்களவைக்குத் தேர்தல் நடைபெறுவதால், அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "மக்களவைத் தேர்தல் நடவடிக்கை முடிவடைந்த பிறகு, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய நிதியமைச்சகத்தை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் காலங்களில் இந்தத் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் மத்திய நிதியமைச்சகத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது' என்று அந்த தகவல்கள் தெரிவித்தன.மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 16ஆம் தேதி எண்ணப்படுகின்றன.எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குப் பிறகுதான் கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி