பெண் ஆசிரியர்களுக்கு தொலை தூரத்தில் தேர்தல் பணி: ஆசிரியர் கழகம் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

பெண் ஆசிரியர்களுக்கு தொலை தூரத்தில் தேர்தல் பணி: ஆசிரியர் கழகம் எதிர்ப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண் முதுகலை ஆசிரியர்களுக்கு தொலை தூரத்தில் தேர்தல் பணி நியமனம் வழங்கப்படுவதற்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.கோபி, புதன்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து 15 கிலோமீட்டர்தூரத்திற்குள்ளாகவே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும், இதனால் பெண் ஆசிரியர்களுக்கு எந்தவிதமான சிரமும் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்த 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பானது ஆசிரியர்களின் வசிப்பிடத்திலிருந்து தொலைதூரத்தில் நடத்தப்பட்டது. அதாவது, ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆசிரியர், தளி சட்டப் பேரவை தொகுதிக்கு பணி நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தேன்கனிக்கோட்டையில் தேர்தல்பயிற்சி வழங்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 120 கி.மீ. தொலைவாகும்.

இதுபோன்ற உத்தரவால் தேர்தல் பணியானது அதிக தொலைவில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் நியமனம் செய்யப்படுவார்களோ என்ற அச்சம் பெண் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, பெண் முதுகலை ஆசிரியர்களுக்கு 15 கி.மீ. தூரத்தில் தேர்தல் பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி