ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் கல்விக்கடன் கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் கல்விக்கடன் கிடைக்குமா?


பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மாணவர்கள் தற்போது விடுமுறையில் உள்ளனர். இந்நிலைமே இரண்டாவது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
மாணவர்கள் கல்லூரிகளை அணுகி கட்டண விவரங்கள் , கல்லூரியில் சேர்வதற்கான முறைகள் ஆகியவற்றை சேகரிக்க தொடங்கி விட்டனர்.இன்றைய நிலையில் மாணவர்கள் தங்களது கல்வி கனவுகளை நனவாக்கும் கல்லூரி கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. இன்று பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வியின் செலவுக்கான பணத்தை ஏற்பாடு செய்ய பெரிதும் சிரமப்படுகின்றனர். ஏனென்றால் படிப்புக்காக கல்லூரிகள் கேட்கும் கட்டணங்கள் நடுத்தர குடும்பத்தினருக்கு சற்று அதிகமாகும். இதுபோன்ற சூழலில் பெற்றோருக்கு இருக்கும் ஒரே வழி கடன் வாங்குவதுதான். மாணவர்களின் கல்விக்காக பொதுத்துறை வங்கிகளும் சில தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்குகிறது.

வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடன் குறித்தும் அதனை பெறுவதற்கு எவ்வாறு வங்கிகளை அணுக வேண்டும் என்ற வழிமுறையும் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. இதுபற்றி தெரிந்தவர்களுக்கு கூட கல்விக்கடன் குறித்து ஏராளமான சந்தேகங்கள் உள்ளது.இதுகுறித்து வங்கி மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது , கல்விக்கடன் என்பது மாணவர்களின் உயர்கல்விக்காக கொடுக்கப்படும் கடன். இதனை மருத்துவம், பொறியியல், பிஎஸ்சி உள்ளிட்ட பல படிப்புகளுக்காக வங்கிகள் வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படும். ஒரு சில வங்கிகளில் கலைப்படிப்புகளுக்கு கல்விக்கடன் இல்லை என்று மறுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதில் வேலை கிடைக்காது என்று சில வங்கிகள் நினைப்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை உள்ளது.கல்விக்கடன் வழங்குவதற்கு வங்கிகள் பின்பற்றும் விதிமுறைகள், ரூ.4 லட்சம் வரைஎந்த உத்தரவாதமும் இன்றி கல்விக்கடன் வழங்கப்படும்.

ஒரு லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். 4 லட்சத்திற்கு மேல் வழங்கப்படும் கடனுக்கு சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியில் கல்விக்கடன் பெற்றுக்கொள்ளலாம். கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது மிகமுக்கியமாகும். கல்விக்கடன் விண்ணப்ப படிவத்துடன் , கல்லூரியிலிருந்து கல்விக்கட்டணம் விவரம் குறித்து சான்றொப்பம் சான்றிதழ், உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியை முதலில் அணுகி கல்விக்கடனுக்காக விண்ணப்பித்தால் கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறினார்.வங்கிகளை பொருத்தவரை கல்விக்கடன் கொடுப்பது அந்தந்த மேலாளரை பொறுத்தது என்ற நடைமுறைதான் தற்போது உள்ளது. ஆனால் சட்டப்படி ஒரு மாணவருக்கு உயர்கல்வி படிக்க கல்லூரியில் இடம் கிடைத்தாலே அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும். இருப்பினும் பெரும்பாலான வங்கிகள் இந்த விதிமுறைகள் பற்றி கவலைப்படுவதில்லை. இதற்கு காரணமாகசில வங்கி அதிகாரிகள் கூறுவது மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டால் கடனை மாணவர்களால் திரும்ப செலுத்த முடியாது என்கின்றனர் .

மேலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கல்விக்கடனை முறையாக திருப்பி செலுத்தாததால் வராக்கடன் அதிகரிக்கும் நிலை உள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் பொதுத்துறை வங்கிகள் கொடுக்கும் கடன் மீண்டும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் கடன் வழங்குகிறது. கல்விக்காக கொடுக்கப்படும் கடன்களை மாணவர்கள் முறையாக திருப்பி செலுத்திட கல்லூரிகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தால், கல்விக்கடனை மாணவர்களால் திருப்பி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை வங்கிகளுக்கு ஏற்படும். அவ்வாறு வங்கிகள் நம்பினால் மட்டும் தான் பெரும்பாலான மாணவர்களின் கல்விகனவுகள் நனவாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி