பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குஇலவச கணினி பயிற்சி நடக்க உள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில், இலவச பயிற்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டு வரும் 28ம் தேதி முதற்கட்ட பயிற்சி துவங்குகிறது. இதற்கான, விண்ணப்பங்கள் வரும் 21ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விண்ணப்பிக்கும் வரிசைப்படி முன்னுரிமை அடிப்படையில் இரண்டாவது வாரம் பயிற்சி அளிக்கப்படும்.முதற்கட்டமாக ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மே 5ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையும் நடக்கிறது. இதில், பயிற்சிபெறும் மாணவர்களுக்கு மதியம் இலவச உணவும், இலவச பஸ் வசதியும் செய்து தரப்படுகிறது.

இலவச பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், திருவண்ணாமலையில் அருணை காலேஜ் ஆப்இன்ஜினியரிங் கல்லூரி அலுவலகம், திருவூடல் தெரு ஸ்மார்ட் கிட்ஸ் நிறுவனம், பெரியார் சிலை அருகில் ஏ.பி.சி., பிரிண்டர்ஸ், மறறும் செங்கம் பஸ் ஸ்டாண்டில் ஜெயம் மெடிக்கல், போளூரில் ராஜா எலக்ட்ரிக்கல்ஸ், ஆரணியில் ஜெய கம்யூட்டர் சென்டர், மணலூர்பேட்டையில் பாபு டெலிபோன் பூத், செஞ்சியில், மோகன் ஸ்டுடியோஸ் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கல்லூரியில் வரும் 28ம் தேதி நேரில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக இயக்குனர் கம்பன், செயலாளர் செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி