தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம்


தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக டிரைவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

மதுரை, தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக டிரைவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக்கழக டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடக்குரத வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1979–ம் ஆண்டு டிரைவராக பணியில் சேர்ந்தேன். 1981–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 22.12.2003 அன்று ஓய்வு பெற வேண்டும். விருப்ப ஓய்வு கேட்டு முன்கூட்டியே விண்ணப்பம் கொடுத்தேன். அதன்படி 2001–ம் ஆண்டு ஜூலை மாதம் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் கொடுத்தேன். 20 ஆண்டுகள் பணி முடிக்காத காரணத்தினால் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துக்கழக பொது மேலாளர் தெரிவித்தார். நான், 22 ஆண்டுகள் 3 மாதம் பணியாற்றி உள்ளேன். பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்பு உள்ள காலத்தை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நியாயமற்றது
இதுதவிர நான் விடுமுறை எடுத்த நாட்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விருப்ப ஓய்வு பெற அனுமதித்து விட்டு 20 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்று கூறி ஓய்வூதியம் தர மறுப்பது நியாயமற்றது. விருப்ப ஓய்வு பெற அனுமதிக்கும் முன்பு, இதை தெரிவித்து இருந்தால் 20 ஆண்டுகள் பணி முடிவடையும் வரை வேலை பார்த்து இருப்பேன்.
எனவே, நான் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்பு பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எனக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஓய்வூதியம்
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் நெல்லை வக்கீல் வி.கண்ணன் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்பு பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர், 20 ஆண்டுகள் பணி முடித்ததாக கருதி அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி