பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கூடுதல் அலுவலர்கள்; ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2014

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கூடுதல் அலுவலர்கள்; ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில், ஏற்படும் தொய்வை தவிர்க்க, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்,'' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மார்ச் - ஏப்ரலில், பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடந்தது. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி, 66 மையங்களில் ஏப்.10 முதல் நடக்கிறது. ஆசிரியருக்கு காலை, பிற்பகல் என, இரு கட்டமாக 30 விடைத்தாள் திருத்தும்பணிக்காக வழங்கப்படுகிறது. தற்போது, தமிழ்பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் விடைத்தாள் வீதம் திருத்தப்படுகிறது. ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பின், மதிப்பெண்களை சரிபார்க்க, தனியாக அலுவலர்களை, தேர்வுத்துறை இயக்குனரகம் இந்த ஆண்டு முதல் நியமித்துள்ளது. இவர்கள், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்ப்பதற்குள் கால தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மதிப்பெண் பட்டியலை சரிபார்க்க, கூடுதலாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் என்.இளங்கோ கூறுகையில்,"" மதிப்பெண் பட்டியல் சரிபார்க்கும் அலுவலர்கள், அனைத்து விடைதாள்களையும் சரிபார்க்கவேண்டும். இதனால், கூடுதல் நேரமாகிறது. இதை தவிர்க்க, கூடுதல் அலுவலர்களை நியமிக்கவேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனருக்குகோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி