வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர் விபரங்கள் சேகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2014

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர் விபரங்கள் சேகரிப்பு.


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவை மேற்கொள்ள, விபரங்களை சேகரிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றுவழங்கும் பொழுது ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே 10ம் வகுப்பு முடித்து மதிப்பெண் சான்றுகளை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 12ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், பதிவெண், முகவரி, ஏற்கனவே பதிந்த வேலை வாய்ப்பகத்தின் பதிவெண்ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.முதல் முறையாக பதிவு செய்யும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்கள் அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், பதிவெண், பிறந்த தேதி, பாலினம், அப்பா, அம்மா பெயர், முகவரி, மாவட்டம், ரேஷன் கார்டு எண், சாதி சான்றிதழ் எண், மதம், உயர்கல்வி படிக்க விரும்புகிறீர்கள், எனில், எந்த வகையான படிப்பு, அதை விடுத்து தொழில் செய்ய விரும்பினால், சொந்த தொழிலா, பிறரிடம் வேலைக்கு செல்கிறீர்களா? ஆகிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விபரங்களை தலைமை ஆசிரியர்கள் வருகிற மே 2-ம்தேதிக்குள் சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கணினி ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அதிகாரிகளுடன் ஆலோசித்து, பதிவை ஆன்லைனில் செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி