ஓவியர் இரவிவர்மா அவர்களின் பிறந்ததினம் இன்று... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

ஓவியர் இரவிவர்மா அவர்களின் பிறந்ததினம் இன்று...




( இரவிவர்மா அவர்களின் புகழ்பெற்ற ஓவியங்களில் சிலவும் )


ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், 

இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார். அவர் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கருதப்பட்டார். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்து, நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவி வர்மா அவர்கள்.

ராஜா ரவி வர்மா அவர்கள், கேரளாவில், திருவனந்தபுரத்திலிருந்து கிளிமானூர் அரண்மனையில் ஏப்ரல் 29, 1848 ல் பிறந்தார்.  சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில்ஆர்வம் காட்டினார். ஏழு வயதில் அவர் கரித்துண்டுகளைப் பயன்படுத்தி அரண்மனை சுவரில் வரையத் தொடங்கினார். அவருள் ஒளிந்திருந்த ஓவியத்திறமையை கவனித்த அவரது மாமாவான ராஜா ராஜாவர்மா, அவருக்கு ஓவியம் வரைவதற்கான ஆரம்பப் பாடங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். 

ராமஸ்வாமி நாயுடு அவர்கள் உதவியோடு தண்ணீர் ஓவியத்தைக் கற்றார்.

ஆங்கிலேய ஓவியரான தியோடர் ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியப் பாடங்களைக் கற்றார்.

ரவிவர்மரின் ஓவியங்களும், விருதுகளும்


மகாராஜா, ராஜவர்மரை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக ‘வீரஸ்ருங்கலா’ என்னும் உயரிய விருதை ரவிவர்மருக்கு அளித்து கௌரவித்தார் 1873ல், ரவி வர்மா அவர்கள், சென்னை ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசை வென்றார். 1873ல், வியன்னாவில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில், அவரது ஓவியங்களும் இடம்பெற்றன. சிறந்த ஓவியத்திற்கான விருதை வென்று, அவரும், அவரது ஓவியங்களும் உலகளவில் பிரசித்திப் பெற்று, பெரும் வரவேற்பையும் பெற்றது 

ஓவியக்கலை நுணுக்கங்கள்


ரவி வர்மர் அவர்கள், தனது ஓவியங்களில் மகாபாரத கதை அத்யாயங்களான துஷ்யந்தன் – சகுந்தலா, நளன் – தமயந்தி போன்ற தொடர்களை சித்தரித்த விதம்   குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஓவியங்களிலுள்ள சக்தி மற்றும் ஆற்றல் வாய்ந்த வெளிப்பாட்டால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய கலைநுட்பத்தை நவீனமயமாக்க முயற்சி செய்தார். நவீன ஓவிய மரபை, இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தினார். அவரது ஓவியங்களில் இந்திய மரபுகளோடு, ஐரோப்பிய கலை நுட்பக் கலந்திணைப்பைக் காணலாம். இதுவே, அவரது ஓவியங்கள்  சிறந்த விளங்கக் காரணமாகும்.

இந்திய கலைக்காக ரவிவர்மரின் பரந்த பங்களிப்பைப் பரிசீலிக்கும் விதமாக, கேரளா அரசு, “ராஜா ரவி வர்மா புரஸ்காரம்” என்று ஒரு விருதை, கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் மக்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.

ராஜா ரவி வர்மா அவர்களின் புகழ்பெற்ற ஓவியங்களில் சில:


சொத்துகளை இழந்து மகனை ஏலம் விடும் ஹரிச்சந்திரன். 



யுத்தத்திற்கு முன்பு கௌரவர்களிடம் கண்ணன் தூது செல்கிறான். 




மகள் சகுந்தலையை மேனகையிடமிருந்து பெற மறுக்கிறார் விஸ்வாமித்திரர். 



தூங்கும் தமயந்தியைக் கைவிட்டுச் செல்கிறான் நளன். 



தமயந்தி அன்னத்துடன் பேசுகிறாள். 



2 comments:

  1. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ...



    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .....



    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி