பள்ளிகளில் நுழைவு தேர்வு: அரசு எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

பள்ளிகளில் நுழைவு தேர்வு: அரசு எச்சரிக்கை.


கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர் சேர்க்கை நடத்தியதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், வரும் கல்வியாண்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு நேற்று நுழைவுத்தேர்வு நடந்தது. இதற்கு, பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கூட மாணவர் சேர்க்கை நடத்திட, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று கல்வித் துறை தெரிவித்துள் ளது.இந்த விதி அரசு உதவி பெறும் பள்ளிக்கும், அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்தசம்பவம் குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில் “பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது. இதுகுறித்து விளக் கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளியிடம் கேட்டுள் ளோம். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

1 comment:

  1. Take away that schools licence, I was one of the affected person because of CSI trust, I could not pay the fees during my second year in CSI Bishop appasawamy college, I asked them to reduce the fees amount in my refundable deposit that I paid in my first year. They showed me the way out. I could not forgot that incident, they r simply money minded rascals.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி