ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு.


தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். பார்த்திபனுக்கு ஆதரவு அளிப்பது என்று தென் மண்டல அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்இடைநிலை, சிறப்பு ஆசிரியர்களாக தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தீர்க்கப்படாத பிரச்னையாக இருந்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகித்தை வழங்கக்கூடியஅரசு ஆணை எண் 216-ஐ அமல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்றும், மேலும் தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆதரவு அளிப்பது என்ற முடிவினை, நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஞாயிற்றுக்கிழமை இச் சங்கத்தின் தென் மண்டல தலைவர் கே. சுப்பிரமணியன் (சி. புதுப்பட்டி) தலைமையில் தேனி மாவட்டத் தலைவர் எஸ். ரெங்கசாமி (கம்பம்), மாவட்டச் செயலர் எஸ். சவரிமுத்து (ஆனமலையான்பட்டி), மாவட்ட பொருளாளர் என். தங்கராசு (போடி), நல்லாசிரியர் ஏ.சி. சிவபாலு (பெரியகுளம்), கந்தசாமி, வடிவேல் (ராயப்பன்பட்டி), சுரேஷ்குமார் (என்.டி. பட்டி) உள்பட பலர் தெரிவித்தனர்.

1 comment:

  1. Sec.gr.teachers unmaiyave unga sangathula erukaangala? Ponga sir neengalum unga sangamum....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி