தேர்தல் பணி - ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும் - வேண்டு கோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2014

தேர்தல் பணி - ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும் - வேண்டு கோள்.


தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும்’ என தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள் விடுத்துள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயலாளர் சாம் மாணிக்கராஜ் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:

முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான ஆயத்தப்பணி களை காலை 5.30 மணிக்கே தொடங்க வேண்டியுள்ளது. வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குசாவடிகளில் உணவு அருந்தக்கூட நேரம் இருப்பது இல்லை. போக்குவரத்து வசதியற்ற கிராமங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் இரவு நேரம் பயமின்றி வீடு திரும்ப வசதியாக வாகன வசதி செய்து தரப்பட வேண் டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை சேகரிக்க வரும் அலுவலர்கள் கண்காணிப்பின்கீழ் இந்த வசதி செய்து தரப்பட வேண்டும். இதனால், பெண் ஆசிரியர்கள் தயக்கமின்றி இப் பணியை முன்வந்து செய்ய வசதியாக இருக்கும்.

தேசிய அளவில் ரூ.1400 கோடி அளவில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. எனவே, இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் போன்ற பணிகளை வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் கடந்தும் மதிப்பூதியம் வழங்கவில்லை. ஏற்கனவே பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணம் வழங்கவில்லை. எனவே, அதை உடனே வழங்க ஆவண செய்ய வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி