சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டில் 100% மாணவர் சேர்க்கை கட்டாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2014

சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டில் 100% மாணவர் சேர்க்கை கட்டாயம்.


ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீத நலிவடைந்த பிரிவு மாணவ மாணவியர் சேர்க்கை 100 சதவீதம் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
* ஒவ்வொரு தனியார் சுயநிதி பள்ளியிலும் எல்கேஜி, முதல் வகுப்பு, 6ம் வகுப்பு ஆகியவற்றில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். அதன் அடிப்படையில் 25% இடங்கள் கணக்கிடப்பட வேண்டும்.
* வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்றாலும் அந்த பள்ளிகளிலும் நுழைவுநிலை வகுப்புகள் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கை விபரங்களை சேகரித்து இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி