10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2014

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.


எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. இதில் 91.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றால் இந்த ஆண்டே தங்களது உயர்கல்வியை தொடர முடியும். இதற்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் இறுதியில் நடைபெற உள்ளது. துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தவிர கூடுதலாக ரூ.50ஐ பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பம் எதுவும் கிடையாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி