ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2014

ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு!

சென்னை : எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், அடுத்த மாதம், 12ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இதுவரை, 27 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுஉள்ளனர். 
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும்; சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த படிப்பு களுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம், மே 14ல் துவங்கியது. இதுவரை, 27,999 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்; இதில், 2,550 விண்ணப்பங்களை, மாணவர்கள் சமர்பித்து உள்ளனர். விண்ணப்பங்கள் பெற, இன்னும் ஐந்து நாட்களே (கடைசி நாள், மே 30) உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூன் 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீட்டு விவரங்களை தர, மாணவர்களுக்கு, ஜூன் 10ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டு, ஜூன் 12ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிட, மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 18ல் தொடங்கும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி