எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு.


தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

இதுவரை 27,966 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் கடந்த புதன்கிழமை (மே 14) தொடங்கியது.இதுவரை மொத்தம்27,966 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். விண்ணப்ப விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (மே 25) கிடையாது.

ஜூன் 2 கடைசி: விண்ணப்பங்களைப் பெற மே 30-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள் ஜூன் 2-ஆம் தேதியாகும். இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளன.ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்களில் பலர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். மறு மதிப்பீட்டுக்குப் பிறகு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணைஜூன் 10-ஆம் தேதிக்குள் அளிப்பதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் மறு மதிப்பீடு மதிப்பெண்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் கிடைத்து விட்டால், ஜூன் 12-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி