பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: 19 பேர் மாநில அளவில் முதலிடம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2014

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: 19 பேர் மாநில அளவில் முதலிடம்.


அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தேவராஜ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த, கிருஷ்ணகிரி மாவட்ட ஸ்ரீவிஜய் வித் பெண்கள் பள்ளி மாணவி காவ்யா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

19 பேர் முதலிடம்:

500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம்இடத்தைப் பிடித்துள்ளனர்.500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை, 321 பேர் பிடித்துள்ளனர்.

தேர்ச்சி விகிதம்:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7%. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3 பேர் 500-க்கு 500:

தமிழ் அல்லாத பிற மொழிப் பாடங்களை படித்தவர்களில் 3 பேர் 500-க்கு 500 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்கா தேவி (சமஸ்கிருதம்).

பொன்னேரி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.ஹேமவர்ஷினி (பிரென்சு) மற்றும் கோவை ஜி.ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (பிரென்சு) ஆகியோர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைந்தது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 11லட்சத்து 13 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.

முடிவுகளை தெரிந்து கொள்ள:

தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் கீழ்க்காணும் தேர்வுத்துறை இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் தெரிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி