பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி.


பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதனடிப்படையில் தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.பதிவு எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யும் போது மாணவர் பற்றியமுழுவிபரமும் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவரின் ரேஷன் கார்டு எண், ஜாதி, மதிப்பெண் சான்று ஆகியவற்றை பரிசோதித்து பள்ளி நிர்வாகம் வேலைவாய்ப்பக பதிவேட்டில் பதிவு செய்து பதிவு அட்டையை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.இவ்வாறு பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் பதிவு செய்யும்மாணவர்களுக்கு ஒரே பதிவுமூப்பு வழங்கப்பட உள்ளது.இதுபற்றி வேலைவாய்ப்பு அலுவலர்ஒருவர் கூறுகையில், Ôபள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பதிவு செய்ய முடியாதவர்கள், மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். ஆன்லைன் வசதியில்லாத பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தலைமையாசிரியர் உதவியுடன் அருகிலுள்ள பள்ளிகளில் பதிவு செய்து கொள்ளலாம். மதிப்பெண் சான்று வழங்கும் தேதியில் இருந்து 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும்Õ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி