பிளஸ் 2 விடைத்தாள் நகல் ஜூன் 2ம் தேதி கிடைக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல் ஜூன் 2ம் தேதி கிடைக்கும்.


பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்து சந்தேகம் உள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 9ம் முதல் 14ம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைத்தனர்.இதன்படி விடைத்தாள் நகல் கேட்டு 79 ஆயிரத்து 953 பேரும், மறுகூட்டல் செய்ய கேட்டு 3,346 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவரும் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமின்றி 4, 5 பாடப்பிரிவுகளிலும் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து மேற்கண்ட மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும்ஆன்லைனில் வெளியிட வசதியாக ஸ்கேன் செய்யும் பணி நடக்கிறது.ஜூன் 2ம் தேதி மாணவர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் ஆன்லைனில் தங்கள் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்கு பிறகே மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி