ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆர்வம் குறைகிறது20 ஆயிரம் காலியிடங்களுக்கு 4000 விண்ணப்பமே விற்பனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2014

ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆர்வம் குறைகிறது20 ஆயிரம் காலியிடங்களுக்கு 4000 விண்ணப்பமே விற்பனை.


ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர இதுவரை 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பில் (டிப்ளமோ) ஆண்டுக்காண்டு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. இரண்டாண்டு ஆசிரியர் டிப்ளமோ பயிற்சிக்கு அரசு ஒதுக்கீட்டில் மட்டும் 20 ஆயிரம் இடங்கள் உள்ளன.கடந்த ஆண்டுகளில் இப்படிப்பை முடித்த பல ஆயிரம் பேர் ஆசிரியர் வேலை கிடைக்காமல் உள்ளனர்.இதன் காரணமாக ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை வரை சுமார் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக ஆசிரியர் பயிற்சி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.எனவே மேலும் 500 விண்ணப்பங்கள் வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இப்படிப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும் சில பயிற்சி நிறுவனங்களில் மிக குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் சேர்ந்து பயின்று வருகின்றனர். குறைந்த அளவே விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 2வது வாரத்துக்கு பிறகு கலந்தாய்வு நடத்த ஆசிரியர் பயிற்சி வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

4 comments:

  1. தற்காலிக P G assistant பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு .தினமலர் - மதுரை பதிப்பு . பக்கம் 14.

    ReplyDelete
  2. நீங்கள் 4000 பேரும் லட்சக்கணக்கானவர்களுடன் போட்டியிட நம்பிக்கை இருந்தால் மட்டும் ஆசிரியப்பயிற்சியில் சேருங்கள். இல்லாவிட்டால் சேர்ந்து வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். இப்படிக்கு ஆசிரியப்பயிற்சியால் 10 ஆண்டுகளாக வறுமையில் வாழும் நான்.

    ReplyDelete
  3. இன்னுமா இந்த உலகம் நம்மல நம்புது... By Teacher Training...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி