மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்.. தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்.. தினகரன்



செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி மங்கல்யான் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட தூர பயணத்தை தொடங்கியது. மங்கல்யான் தனது பயணத்தை துவங்கி இன்றுடன் 200 நாள் நிறைவடைகிறது. தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் அதன் பயண தூரத்தில் 60 சதவீதத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இது குறித்து இஸ்ரோவின் இயக்குனர் டேவிட் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மங்கல்யான் தனது பயண தூரத்தில் 60 சதவீதத்தை கடந்துள்ளது. அதாவது 42 கோடி கிமீ தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி