டிடிஎட் தேர்வுகள் ஜூன் 26ல் தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2014

டிடிஎட் தேர்வுகள் ஜூன் 26ல் தொடக்கம்.


தொடக்க கல்வி பட்டய (டிடிஎட்) படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 26ம் தேதியும், முதலாண்டு மாணவர்களுக்கு ஜூலை 7ம் தேதியும் தொடங்குகிறது.
தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (டிடிஎட்) ஜூன் 2வது வாரத்தில் நடக்கும் என்று ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தது.ஜூன் மாதம் மேற்கண்ட தேர்வுகள்நடக்கும் போது டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு நடக்க உள்ளது. அதனால் டிடிஎட் தேர்வு எழுதுவோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், தேர்வுத் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது.இதையடுத்து, டிடிஎட் தேர்வுகள் பாதிக்காத வகையில் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிடிஎட் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கானதேர்வுகள் ஜூன் 26ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடக்கும்.

முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 7ம் தேதி தொடங்கி 14ம் தேதிவரை நடக்கும். தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும்.மேற்கண்ட தேர்வுகளுக்கான அட்டவணை தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி