ஓட்டு எண்ணும் பணி துவங்கியது ; நாடு முழுவதும் பா.ஜ., முன்னிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

ஓட்டு எண்ணும் பணி துவங்கியது ; நாடு முழுவதும் பா.ஜ., முன்னிலை


கடந்த ஒன்றரை மாத காலமாக நடந்து முடிந்த தேர்தல் இறுதி முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.
ஆரம்பம் முதலே நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்., 70 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஏனையகட்சிகள் 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

அ.தி.மு.க, 32 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.காங்., துணை தலைவர் ராகுல்கூட பா.ஜ., வேட்பாளரை விட குறைந்த ஓட்டுக்கள் பெற்று முன்னும், பின்னுமாக இருந்து வருகிறார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி ஒன்றரை லட்சத்திற்கும் மேலானஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.எதிர்பார்த்தது போலவே, மீடியாக்களின் கருத்துக்கணிப்பின்படி மோடி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கிறார். நினைத்தது போலவே மோடி பிரதமராகிறார்.

ஓட்டு எண்ணும் மையங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மத்திய ராணுவம் மற்றும்உள்ளூர் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 543 தொகுதிகளில்,உத்திரபிரதேசம்-80, பீகார்- 40, அசாம்- 14, சட்டீஸ்கர்- 11, டில்லி-7, குஜராத்-26, அரியானா-10, ஜார்கண்ட்-14, கர்நாடகா-28, கேரளா-20, மத்தியபிரதேசம்-29, மகாராஷட்டிரா-48, ஒடிசா-23, பஞ்சாப்-13,ராஜஸ்தான்- 25, சீமந்திரா-25, தெலுங்கானா- 17, தமிழ்நாடு-39, புதுச்சேரி-1, மேற்குவங்கம்-42, மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியன அடங்கும்.

14 comments:

  1. Amma win mulu adharavodu India vil indhuthuva kolhaiyudan modi atchi amaipathu urudhi , malai indhuke India endra mudivu veliahum

    ReplyDelete
  2. tamilnattil admk athikaidangalil win panni tet pass pannavangaluku oru nalla mudivu varanum

    ReplyDelete
  3. Amma win mulu adharavodu India vil indhuthuva kolhaiyudan modi atchi amaipathu urudhi , indru malai indhukaluku matume india endra mudivu veliahum

    ReplyDelete
  4. nejamaga vera oru ulagam poka vazhi irunthiruntha poiyiruppen.pl. we are waiting for your final decision for tet candidates. sariyana neethikkaka kathirikirom.

    ReplyDelete
  5. சத்தியமாக நானாக கிளப்பவில்லை... கேள்விப்பட்டேன்.. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தகுதித் தேர்வு நிராகரிக்கப் படுமா?... நன்கு அறிந்தவர் பதிலளியுங்கள்.. தமது அடிப்படையில் கருத்துகளை கூறாமல் சட்ட ரீதியில் வல்லுனர் இதை உறுதி படுத்துங்கள் ப்ளீஸ் ....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக உறுதியாக TET தேர்வு நிராகரிக்கப் படாது.

      Delete
    2. mani sir ஜெயலலிதா patthi ethum pesa villai

      itharku payamum oru karanama.... thodai nadukkamum oru karanama...

      ஜெயலலிதா eppadi vartharkal ena sollavaeilla

      Delete
  6. No need to cancel for TET Exam

    ReplyDelete
  7. cancel aaga chance irruku

    ReplyDelete
    Replies
    1. எதனடிப்படையில் cancel ஆகும் என்று விளக்கினால் நாங்களும் அறிந்து கொள்வோம்.

      Delete
    2. Sila fail ana MUTAL sollum rumor namba vendam,
      sthai nambivanum mutal.
      last exam ill ithey rumor sonnanga

      Delete
  8. a bright future is appearing within our site

    ReplyDelete
  9. TET அதிகமாக பின்பற்றுவதே பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதனால் TET ரத்து செய்ய வாய்ப்பே இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி