தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு.


தொடக்க கல்வித்துறையில் விடுப்பில் உள்ள ஆசிரியர், அலுவலர் விவரங்களை சேகரிக்க அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலரும் முறையாக விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறையில் உள்ளதாகவும், விடுமுறை காலம் முடிந்த பின்னரும் பணியில் சேராமல் இருப்பதாகவும் தொடக்க கல்வித்துறை இயக்குநருக்கு தகவல்கள் சென்றுள்ளன. இதனால், அவர்களின் விவரங்கள் சேகரிப்பட உள்ளது.

இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளஉத்தரவில் கூறியிருப்பதாவது:தொடக்க கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் நீண்ட நாட்களாக விடுப்பில் இருத்தல் மற்றும் விடுப்பு முடிந்தும் பணியில் சேராதவர்கள் விபரங்களை உடனே தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பெயர், பணி விபரம், கடைசியாக விடுப்புக்கு விண்ணப்பித்த நாள், விடுப்பு காலம், மீண்டும் பணியில் சேர்ந்தாரா இல்லையா என்ற விபரம், விடுப்பு நீட்டிக்கப்பட்டதா, விடுப்புவிண்ணப்பம் அளிக்காமல் தொடர்ந்து அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ வருகை தராதவர்கள் விபரம், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம் போன்ற தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி