தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவது எப்போது?தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2014

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவது எப்போது?தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.


மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 5-ஆம்தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது, அமைச்சர்கள் சொந்த பயன்பாட்டுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளின் கூட்டங்களை நடத்தக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, ஏற்கெனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது, ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவது ஆகிய நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள்முழுமையாக வெளிவந்துள்ளன.

இந் நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்போது முடிவுக்கு வரும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது, ""தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையான அளவில் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம்தான் வெளியிட வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

17 comments:

  1. 2012 canditates relaxation kettu request to cm THE HINDU

    ReplyDelete
    Replies
    1. tntet rank list for teachers

      May 18th, 2014 by tet tamilnadu

      Flash news :tntet subject wise and community wise and

      differently abled rank lists prepared by trb for nearly 16,000

      postings . It will be published very soon..

      tet weightage calculator as per court order

      tntet rank list for teachers

      tntet weightage new g.o for revised into 55 % marks

      check your and find your roll number by entering application number

      tntet new weightage calculator

      We can expect ,there is a change in weightage for secondary

      grade teachers , trb may be decided to select from weightage

      marks.

      Details of weightage for sec.gr. assistant teachers ( new****)

      You can view your tet cut off marks 2014 by community wise easily..

      This tntet cut off marks are Analise by conducting state level voting.

      So it is nearly similar to trb tet cut off marks , which will published by trb definitely..

      Tamilnadu government today announced and published the g.o about section method of secondary grade teachers and bt teachers.

      Delete
    2. சதிஷ், WWW.tettamilnadu.com என்ற வலைத்தளத்தில் 13 தேதி என்பது மட்டுமே 18 தேதி என்று மாற்றப்பட்டுள்ளது இதில் வேறு ஒன்றும் புதிதாக இல்லை.

      Delete
    3. Sateesh sir secondary grade teachers selection method LA enna maatha poraanga.....therinja sollavum

      Delete
    4. Sry therila pa ( Unknown )

      Delete
  2. தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கிடைக்குமா?
    முதல்வரின் கருணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

    மதுரை- தி இந்து நாளேடு
    2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
    மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க, தங்களின் பொற்கால ஆட்சியில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அதிகளவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், தகுதி மதிப்பெண்ணான 60 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் விலக்கு அளிக்க கோரினர். இதைத் தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, அவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து ஆசிரியர் பணியில் சேர உதவி புரிந்தீர்கள்.
    இதேபோல, 2012ம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டும். தகுதி தேர்வில் வென்றதற்கான சான்று மட்டுமாவது வழங்கினால், எங்களைப் போன்று நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், எங்கள் பணியை தடையின்றி தொடர முடியும். மேலும், இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது என தேசியக் கல்வி வாரியம் அறிவித்துள்ளதால் வாய்ப்புக் கிடைக்கும்போது, பலரும் ஆசிரியர் வேலையில் சேர முடியும்.
    முதல்வர், எங்களின் கோரிக்கையையும் ஏற்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. Hai friends! Gud morning....... Have a nice day to all..............

    ReplyDelete
  4. All is well. Don't work be Happy

    ReplyDelete
  5. NAMA SETHU SETHU VILAIYADALAMA? When is CV date for tntet2012? Please announce.......

    ReplyDelete
  6. COMEDY !!!!!!!!!!!!!!! TNTET 2012 asking 5% relaxation. Neenga 2013 examku padikalaya?????? 2014 Ku padinga.....

    ReplyDelete
    Replies
    1. ennada edhuvum nadakulayenu paarthen nadandhudichi nadathetaanga

      Delete
  7. marupadium mudalla irrudhu aarambikrangala very good indha piravila posting vaangina maadhiridhan

    ReplyDelete
  8. Netru malaiyudan therdhal nadathai vidhimuraigal mudivukku vandhana.. Ini manila arasugal tham iyalbaana nadavadikaigalai merkollalam..--- Pravinkumar thalamai therdhal anayar.

    ReplyDelete
  9. Is it true arun sir? Where u got the info?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி