சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2014

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!


UPSC சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் கட்டமான Preliminary தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பத்தை www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: மே 17ம் தேதி முதல், Preliminary தேர்வுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

Preliminary தேர்வுக்கான விண்ணப்பத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன், நீங்கள் தேர்வெழுத பதிவு செய்யப்படுவீர்கள். அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, தகுதியுடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மே 17ம் தேதி தொடங்கும் விண்ணப்பித்தல் செயல்பாடு, ஜுன் 16ம் தேதி நிறைவடைகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி தேர்வு நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அது விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி