கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2014

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு


பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன.


ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை:

அதன்படி, ஆரம்ப பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்ற வீதத்திலும், 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 1:35, 9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 1:40 என்ற வீதத்தில் இருக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், அறிவியல் பிரிவு வகுப்பாக இருந்தால், 1:40 என்ற வீதத்திலும், தொழிற்கல்வி பிரிவு வகுப்பாக இருந்தால், 1:25 என்ற வீதத்திலும் இருக்கலாம் என, கணக்கு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய வரையறையை விட, ஆசிரியர் - மாணவர் சதவீதம், குறைவாகவே உள்ளது. ஆரம்ப பள்ளிகளில், 10 முதல், 20 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை, பல இடங்களில் உள்ளது. தேவையை விட, பல பள்ளிகளில், கூடுதல், ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அதே நேரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது. இந்த சமநிலையற்ற நிலையை மாற்றி, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. தேவையை விட, கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து, இரு துறைகளும் விவரம் சேகரித்துள்ளன.

பள்ளி திறப்பதற்குள்...:

அதனடிப்படையில், இரண்டிலும், கூடுதலாக உள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, இரு துறை அதிகாரிகளும், முடிவு செய்துள்ளனர். பள்ளி திறப்பதற்குள், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது. இந்தப் பணி முடிந்த பின், ஜூன், இரண்டாவது வாரத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, தெரிகிறது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி நிரவல் (டெப்ளாய்மென்ட்) நடவடிக்கையால், ஆசிரியர்கள், பீதி அடையத் தேவையில்லை. தற்போது ஆசிரியர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் தான் மாற்றம் இருக்கும். வேறு மாவட்ட மாறுதல், பெரும்பாலும் வராது' என்றார்.

4 comments:

  1. If it so then how will these people give 16000 postings for the TET passed candidates and also anther announcement of 20000 too.. Are u kidding..?

    ReplyDelete
    Replies
    1. We only anticipate numbers. Either Govt. or TRB is not disclosing vacancy details till date

      Delete
  2. wanted franchisee for online school management software company...attaractive commission/ incenive.........pls cantact immediately...need all over tamilnadu......contact .karthi 9600754477

    ReplyDelete
  3. TNTET ----சில உண்மைத் தகவல்கள்

    மூன்று முறையும் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.

    GROUP II வினாத்தாள் வெளியிட்ட அதே நபர்கள்தான் TET,,,,PGTRG வினாத்தாள்களை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது கூறப்பட்டு வரும் பத்து லட்சம் பேரம் உண்மைதான்.சராசரியாக 10/100 பேர் பணத்தின் மூலம் வேலைக்குச் செல்வார்கள்.....இதற்காகவே இந்த கால நீட்டிப்பு.

    ஆதாரங்கள்:

    முதல் முறை நடைபெற்ற தேர்வில் தாள் இரண்டில் மாநில முதல் ரேங்க் மதிப்பெண் 146……அதுவும் கணிதம் அறிவியலில் 90 நிமிடங்களில் PRACTICALLY IMPOSSIBLE……..BECAUSE NEW METHOD OF EXAM……….NEW PSYCHOLOGY QUESTIONS……….ஐன்ஸ்டீனால கூட முடியாது.

    இரண்டு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் மிக அதிகமானோர் தேர்ச்சி (இது பிளஸ் டுவோ டென்த் தோ அல்ல )

    முதல் முறை நடைபெற்ற வினாத்தாளையும் முதல் மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

    முதல் முறை அந்த குறிப்பட்ட மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றோரின் நண்பர்களிடம் விசாரியுங்கள்

    RTI – இன் உதவியை நாடி மாவட்ட வாரியாக STATISTICAL DATA வைக் கேளுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி