தரமான பள்ளி எது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

தரமான பள்ளி எது?


தரமான பள்ளி தனியார் பள்ளிதான்.
அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும் பள்ளிகள் தான் தரமான பள்ளிகள் மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக நாம் கேட்கிறோம்.
அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது அரசு பள்ளிகள் தான்.அப்படியென்றால் அரசு நடத்துகிற சுமார் 28,000 பள்ளிகள் தரங்கெட்ட பள்ளிகளா? இன்றைக்கு பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் எந்த பள்ளியில் படித்தவர்கள். இந்த தரங்கெட்ட பள்ளியில் படித்தவர்கள்தானேஇல்லை... இல்லை ... அவர்கள் படிக்கும் போதெல்லாம் தரமாக இருந்தது என்று சொல்கிறீர்களா?

அப்படியென்றால் எப்போதிலிருந்து இந்த பள்ளிகள் தரம் கெட்ட பள்ளிகளாக மாறியது என்பதை யாராளும் கூறமுடியுமா?ஏன் இந்த கேள்வி? எதற்காக? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. சமீபத்தில் ஓர் ஆசிரியர் அரங்கில் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. அந்த அரங்கில் இருந்த அனைவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் அனைவரும் சொல்லிவைத்தார்போல் அரசு பள்ளிகளில் தரம் இல்லாமல் போய்விட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார்கள். அவர்களது பேச்சில் ஒரு விரக்தி தெரிந்தது. இனிமேல் அரசு பள்ளிகளை காப்பாற்ற முடியாது போன்று பேசினார்கள்.

அரசு பள்ளிகளில் தரம் குறைந்து போனதால் தான் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.எனவே நாம் அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற வேண்டு கேட்டுக்கொண்டனர். எனக்கு புரியவில்லை. எது தரம்? ஆசிரியர் பயிற்சியை முறையாக கற்று தேர்ந்தவர்களைத்தான் அரசு பணியமர்த்துகிறது. பல்வேறு சட்ட திட்டங்களுக்குஉட்பட்டுத்தான் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள்.

போதுமான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.இவர்கள்தவிர வேறு யாரால் தரமான பள்ளியை தரமுடியும். மேலே குறிப்பிட்ட எந்த தகுதியும் இல்லாத, நிரந்தரமற்ற, எந்தவித பயிற்சியும் பெறாத, தனியார் பள்ளிகளில்பணிசெய்யும் ஆசிரியர்களால் எப்படி தரமான கல்வியை தரமுடியும். அப்படி தருகிறார்கள் என்பது ஒரு மாயையே இல்லாமல், வேறு ஒன்றுமில்லை. ஒரு விஷயம் தெரியுமா? எந்த தனியார் பள்ளிகளிலும் தொடர்ந்து பணிசெய்கிற ஆசியர்கள் இல்லை. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு ஆசிரியர் மாறுகிற நிலைதான் இருக்கிறது. இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கம் மாணவர்கள் தரமான மாணவர்களா?அரசு பள்ளிகளில் எப்படி தரம் குறைந்து போனது?

அதற்கு காரணமாக அரசு ஆசிரியர்கள்முன்வைத்தவை
1. ஆசிரியர் பற்றாகுறை
2. வேலைப் பழு
3. பாடத்திட்ட மாற்றம்

ஆசிரியர்கள் பற்றாக்குறை என்றால் 1985ம் ஆண்டிற்கு முன்பு வரை மிக குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டும், பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்பின்கீழ் பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டும், பல பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டும், மரத்தடியிலும், கரும்பலகை இல்லாமலும் பாடம் நடத்திய போது தரமாக இருந்த பள்ளிகள் இன்றைக்கு எப்படி தரம் குறை்நததாக போய்விட்டது. ஆசிரயர் பற்றாக்குறை என்பதும், ஓராசிரியர் மற்றும் ஈராசியர் பள்ளிகள் என்பதும் காலம் காலமாக இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. அதை இன்றைக்கு சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.மற்றொன்று வேலைப்பழு. இன்றைக்கு ஆசிரியர்களுக்கு ரேசன் கார்டு சரிபார்த்தல், மக்கள் தொகை கண்கெடுப்பு, தேர்தல் பணி என பல பள்ளிகள் கொடுக்கப்படுவதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை.

இதற்காக பெரும்பாலும் பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது என்று ஆதங்கப்படுகின்றனர். ஆனால் இதற்கு முன்னல் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்த பணியோடு குடும்பக்கட்டுப்பாடுக்கு ஆள்பிடிக்கும் வேலையும், போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான பிரச்சாரமும் ஆசிரியர்களால் செய்யப்பட்டது. இவை இரண்டும் இன்றைக்கு சொல்லப்படுகிற கூடுதல் வேலைப்பழுவைக் காட்டிலும் மிக மிக கடினமான பணியாகும். இவற்றையும் செய்துகொண்டுதான் அன்றைய ஆசியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.இன்னொன்று பாடத்திட்டம். இன்றைய பாடதிட்டமும் அரசு பள்ளிகளில் தரம் குறைவதற்கானகாரணமாக ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர். காலம் மாறிக்கொண்டே வருகிறது. நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கின்றோம்.

இது தகவல் புரட்சி காலம் நீங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு விநாடியில் லட்சம் வழிகளில் தெரிந்துகொள்ள முடியும். அன்றைக்கு புத்தகங்கள் தவிற வேறு வழிகளில் தகவல் கிடைப்பது மிக குறைவு. இன்றைக்கு அப்படி இல்லை.எனவே மாணவர்களின் மனம், தேவை, ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியமான பாடத்திட்டத்திலிருந்து பல்வேறு கல்வியாளர்களின் போராட்டத்தின் பின்பே பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 2000ங்களில் ”கற்றலில் இனிமை” என்ற வழியில் ஆடல் பாடலுடன் மகிழ்ச்சிகரமான வழிகளில் கல்வியை போதிப்பதற்கான புதிய அணுகுமுறையை அரசு கொண்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ABL என்கிற செயல் வழிக் கற்றல் என்றபுதிய முறையை அரசு கொண்டு வந்துள்ளது. அதிலும் மாற்றம் செய்து இன்றைக்கு சமச்சீர் கல்வி என்ற புதிய பாடத்திட்டத்தை 2010ல் அறிமுகம் செய்து தற்போது நடைமுறையில் உள்ளது.இந்த பாடத்திட்டங்களில் இந்த புதிய அணுகுமுறையில் எப்படி தரம் குறைந்தன என்று சொல்ல முடியுமா? எதன் அடிப்படையில் இவைகள் மாணவர்களின் தரத்தை குறைத்துவிட்டன? அதற்கு ஆதாரம் ஏதேனும் உண்டா? ஆசிரியர்களாகிய நீங்கள் இந்த புதிய பாடத்திட்டமும் அணுகுமுறையும் வந்தவுடன் இது குறித்த விவாதமோ ஆய்வோ செய்தீர்களா? இன்னும் கூட ஒரு கேள்வி இருக்கிறது. கற்றலில இனிமை மாறி ABLக் கொண்டு வரும்போது ஏன் கற்றல்இனிமை தி்ட்டத்தை எடுத்தீர்கள் என்று கேட்டதுண்டா? இதையெல்லாம் செய்யாமல் பொத்தாம் பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் தரம் குறைந்து போய்விட்டது என்று சொல்லுவதை என்னவென்று சொல்லுவது.இந்த பாடத்திட்டங்களில் இந்த புதிய அணுகுமுறையில் எப்படி தரம் குறைந்தன என்று சொல்ல முடியுமா? எதன் அடிப்படையில் இவைகள் மாணவர்களின் தரத்தை குறைத்துவிட்டன? அதற்கு ஆதாரம் ஏதேனும் உண்டா? ஆசிரியர்களாகிய நீங்கள் இந்த புதிய பாடத்திட்டமும் அணுகுமுறையும் வந்தவுடன் இது குறித்த விவாதமோ ஆய்வோ செய்தீர்களா? இன்னும் கூட ஒரு கேள்வி இருக்கிறது. கற்றலில இனிமை மாறி ABLக் கொண்டு வரும்போது ஏன் கற்றல்இனிமை தி்ட்டத்தை எடுத்தீர்கள் என்று கேட்டதுண்டா? இதையெல்லாம் செய்யாமல் பொத்தாம் பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் தரம் குறைந்து போய்விட்டது என்று சொல்லுவதை என்னவென்று சொல்லுவது.

உண்மையில் அரசு பள்ளி மாணவர்களின் தரம் குறையவே இல்லை என்பதுதான் உண்மை.இங்கே தரம் என்று ஆசிரியர்கள் எதைச் சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை.சூ, டை, சீருடை, அடையாள அட்டை அணிந்து பள்ளிக்குச் செல்வதை தரம் என்கிறார்களா?வீட்டின் வாசலிலேயே பிள்ளைகளை ஏற்றி காலை 8 மணிக்கு ஏற்றி 30 கிலோ மீட்டரை ஒரு மணிநேரம் சுற்றி பள்ளியில் விட்டு விட்டு மாலையில் வீட்டு வாசலில் பிள்ளைளைஇறக்கிவிட்டு செல்லும் வேனை தரம் என்கிறார்களா.மம்மி, டாடி என்று குழந்தைகள் தாய், தந்தையரை சொல்லுவதும், ஆங்கிலத்தில் பாடல் பாடுவதும் தரம் என்கிறார்களா.அல்லது ஆங்கிலத்தில் பேசுகிறதையும், எழுதுவதையும் தரம் என்கிறார்களா? இதில் எதுவும் பள்ளிகளுக்கான தரத்தை நிர்ணயிப்பது இல்லை.ஆனால் பொதுவாகவே இன்றைய சமூகத்தில் தனியார் மற்றும் உலகமயமாக்களின் காரணமாக முளைத்துள்ள அதி தீவிர ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும் தான் தரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திறனை மாணவர்கள் அரசு பள்ளியில் மட்டுமல்ல தனியார்பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கும் கிடையாது.ஆங்கிலம் எழுதுவதும், பேசுவதும் பள்ளியில் படிப்பதால் மட்டும் வந்துவிடுவதில்லை. அந்த மொழியை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வருவது. இது தேவையின் அடிப்படையில் வளரும் வரும்.

இதற்கான தேவையே ஏற்படாத அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தைக்கொண்டு மட்டும் பள்ளியின் தரத்தை நிர்ணயம் செய்வது பார்ப்பது சரியான அணுகுமுறையாகாது. மற்ற எந்த வகையில் அரசுப் பள்ளி தரம் குறைந்ததாக இருக்கிறது என்று பார்த்தோமானால்
1. தமிழை வாசிப்பதில்
2. சிறிய கணிதங்களை போடுவதில் ஏற்படுகிற தடுமாற்றங்கள் மட்டுமே.இவை இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எல்லாக் காலங்களிலும் எல்லா பள்ளிகளிலும் இருக்கின்ற பிரச்சனைகள் தான். பொதுவாகவே தனியார் பள்ளிகள் ஆகட்டும், அரசு பள்ளிகள் ஆகட்டும் இரண்டு பள்ளிகளிலுமே இந்த தடுமாற்றம் உள்ள மாணவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதில அரசு பள்ளி மாணவர்களின் நிலை உடனடியாக எல்லோருக்கும் தெரிந்து விடும். ஆனால் தனியார்பள்ளியில் படிக்கிற மாணவர்களின் நிலை வெளியே தெரிவது இல்லை. காரணம் மதிப்பெண் அட்டைகளில் அதிக மதி்ப்பெண்ணை இட்டு பணம் கட்டுகிற பெற்றோரை தனியார் பள்ளிகள் திருப்பதி படுத்துகின்றன. இந்த செயலை அரசு பள்ளிகள் செய்வது இல்லை.

மேலும் இது போன்ற பிரச்சனைகள் லெகுவாக தீர்க்கக் கூடியதே அதற்கு தேவை நம் ஆசிரியர்கள் தெய்வீகத் தொண்டுள்ளத்தோடும், ஆத்மார்த்தமாகவும், அற்பணிப்பு உணர்வோடும், நம்மை நம்பி வந்துள்ள அந்த ஏழை மாணவனுக்கு தக்கு தெரிந்த அனைத்து வகைகளிலும் அன்போடும், புன்னகையோடும், சலிப்பில்லாமலும், கோபமில்லாமலும், எரிச்சலற்றும் கற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைக்கும் கூட அரசு பணிகளில் சேருகிறவர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான் பெரும்பான்மையோர். அரசு பள்ளிதான் மாணவர்களை பலதிறன் படைத்த மாணவர்களை உருவாக்குகிறது.

அவர்களிடம்தான் கற்பனைத்திறனும், படைப்பாற்றல் திறனும், சமூக சிந்தனையும், கூட்டுச் செயல்பாடும், தனிமனித திறனும், கைவினைத்திறனும், உற்று நோக்கும் திறனும், புதிய சிந்தனைத்திறனும், தலைமைப்பண்பும் ஒருங்கே உள்ளது. தரமான பள்ளிகள் என்பது நல்ல பலதிறன் மிக்க மாணவர்களை உருவாக்குவதுதான். அது அரசு பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். மனப்பாடமே தரம் என்று சொல்லும் பள்ளிகளின் தரம் என்பது மாயையே

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆசிரியர்களாகிய நீங்கள் இந்த புதிய பாடத்திட்டமும் அணுகுமுறையும் வந்தவுடன் இது குறித்த விவாதமோ ஆய்வோ செய்தீர்களா? இன்னும் கூட ஒரு கேள்வி இருக்கிறது. கற்றலில இனிமை மாறி ABL க் கொண்டு வரும்போது ஏன் கற்றல்இனிமை தி்ட்டத்தை எடுத்தீர்கள் என்று கேட்டதுண்டா? ******************* 1. என்பவர்கள் எத்தனை பேர் இந்த கல்வி முறையை மாற்றும் போது ஆசிரியர்களிடம் விவாதிக்கின்றனர்.... 2. கல்வி முறை பற்றி ஆசிரியராக பணிபுரிந்து பின்பு பதவி உயர்வு பெற்று உயர் பதவிகளுக்கு சென்றவர்களிடம் கேட்டாலாவது அவர்களின் கல்விமுறையில் மாணவர்களுக்கு ஏற்றமுறை உள்ளதா? என்ன குறைபாடு உள்ளது என்று தெரியவரும்... 3. அனைத்து மாணவர்களும் படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி என்பது எப்படி ஒரு அறிவுப்பூர்வமான முறை என்று சொல்வது... ஒரு மாணவன் பள்ளிக்கு சரியாக வருவதில்லை அல்லது உடல் மான ரீதியான பிரச்சினைகளால் அவனாள் எழுத்துக்களை கூட கற்றுக்கொள்ள முடியவில்லை இப்படிப்பட்ட மாணவனை அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி என்று கட்டி கொண்டு செல்ல வேண்டுமென்றால் அவனால் எப்படி மற்ற மாணவர்களுடன் போட்டியிட முடியும்... 4. ஆசிரியருக்கு மாணவனை கையாள்வதில் இப்போது எந்த முறையை கையாள்வது என்றே தெரியாமல் விழி பிதுங்கி கொண்டுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும் மாணவர்களை தண்டிக்க கூடாது மாணவர் மனம் புண்படும் படி பேச கூடாது ஏன் நடந்துகொள்ளவும் கூடாது என்கிறார்கள் சரி எப்படி தவறு செய்யும் மாணவர்களை சரிபடுத்துவது.. அவர்களை என்ன செய்வது என்று ஒரு முறையையாவது கொடுத்துள்ளார்களா? இதை செய்ய கூடாது என்று ஒரு ஆசிரியர் செய்ததை செய்த பின் சொல்லும் நபர்கள் எதை செய்ய கூடாது எதை செய்ய வேண்டும் என்ற வரைமுறையை சொல்லியிருகிரார்களா... 5. இன்றைய மாணவர்களுக்கு எந்தவிதமான மன பிரச்சினைகளையும் கையாளும் திறன் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன நாம் வாழ்த்த காலங்களில் நமது பெற்றோர்ர்கள் & ஆசிரியர்கள் நம்மை தவறு செய்தால் அடி பின்னிஎடுப்பார்கள் அனால் இப்போது அப்படியில்லை 6. மேலே சொல்லியது தவறான முறை சரி ஆனால் மாணவர்கள் சிறு தோல்விகளையும் ஏற்க்க முடியாமல் தற்கொலை தேர்ச்சி பெறவில்லை என்றால் தவறான முடிவு என்று எதையும் எதிர்கொள்ள முடியாத கோழைகளாக மாறவும் இப்போதைய முறை வழிசெய்கிறது அல்லவா?பெற்றோர்கள் & ஆசிரியர்கள் திட்டுவதாலும் பள்ளியில் குறைவான மதிப்பெண் பெறுவதாலும் ஒருவன் தனது வாழ்க்கையையே முடித்து கொள்கிறான் என்றால் இந்த கல்வியால் என்ன பயன் இதனால் நல்ல மனவலிமை பெற்ற எதிர்கால குடிமகன்களை உருவாக்க போகிறதா? 7. ஒரு ஆசிரியருக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாடம் நடத்த போதியகாலம் இருக்கும் ஆனால் இப்போது பாடம் நடத்துவதை விட அதை பற்றிய அறிக்கை தயாரிக்க தான் நேரமே இருக்கிறது என் அப்போதைய காலங்களில் இந்த திட்டங்களும் அறிக்கைகளும் இல்லாமலே நல்ல மாணவர்கள் தானே உருவானார்கள் இப்போது இவ்வளவு இருந்தும் ஏன் உருவாகவில்லை.. இதற்க்கு ஆசிரியர்களா காரணம்..... 8. அரசு பள்ளிகளில் எவ்வளவு பள்ளிகளில் நல்ல கழிப்பிட வசதி உள்ளது இதை ஒரு சாதாரண விஷயம் என்று நினைக்க வேண்டாம் இப்போது அனைவர் வீடுகளிலும் நல்ல வசதியான கழிப்பறைகளை பயன்படுத்திய மாணவர்களும் முக்கியமாக பெண் குழந்தைகளும் அரசு பள்ளியில் சேரும் போது அவர்களின் கழிப்பிட வசதி பற்றி எந்த கல்வியாளரும் பேசுவதில்லை அப்படியே நல்ல கழிப்பிட வசதிகட்டுமான இருந்தாலும் அதை பராமரிக்க வேண்டிய வசதி எத்தனை பள்ளிகளில் உள்ளது... கழிப்பறை கட்டினால் மட்டும் போதுமாது இல்லை அதை பராமரிக்கவும் வேண்டும்.... 9. ஒரு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தும் போது அதைப்பற்றியும் அதிலுள்ள முறைகளையும் பாடத்திட்டங்களையும் படம் நடத்துகின்ற ஆசிரியர்களின் துணைகொண்டு உருவாக்கவேண்டும் .. அதில் சில குறைகள் இருப்பது பிற்காலத்தில் தெரியவந்தால் அதை சரிசெய்யவும் வழிவகை இருக்கவேண்டும்... இதெல்லாம் இப்போதைய நிலையில் இருக்கிறதா

    ReplyDelete
  3. Introduce extra curricular .games ...
    Competition between government school also like quvish,speach ,composition writing ...etc .
    To be intrduce karathe ,other language ,...(itharkku teachers irunthalum interest aga sollikoduppathillai ...)
    Ithutha n karanam ...

    ReplyDelete
  4. These types of exchanging ideas may lead to the improvement of our education system. continue. Allthe best.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி