▼ இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2014

▼ இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்


தமிழகத்தில் செயல்படும், பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல், தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல்,
பதவிஉயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான
கலந்தாய்வு நடத்தப்படுமோ, என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

ஒவ்வொரு, ஆண்டும் மே இறுதியில் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளிகளில் பணியல் சேர்வது வழக்கம். ஆனால், இக்கல்வியாண்டிற்கான கலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 2013 செப்., 1ல், பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இறுதி பட்டியல், தயார் செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1:35 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில், உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு என்பது, ஒவ்வொரு பள்ளியிலும், பாடவாரியாக கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு, ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவர். 99 சதவீத ஆசிரியர்களுக்கு, இக்கலந்தாய்வின்படி, கட்டாய மாறுதல் வழங்கப்படுகிறது.இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது. இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல், உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வின் வாயிலாக, 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்து விட்டு, உபரி ஆசிரியர்கள் கணக்கிடுவது முரண்பாடுகளுடன் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், ''இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்த பின், பள்ளிகளில் பல இடங்கள் காலியாகும். அதன்பின், ஒவ்வொரு பள்ளியிலும், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதை விடுத்து, உபரி என்ற பெயரில், பிற மாவட்டங்களுக்கும், ஒன்றியங்களுக்கும் ஆசிரியர்களை பந்தாடுவது ஏற்புடையதல்ல. மேலும், 2013 ஆக., 1ன் படி உபரி ஆசிரியர்கள் பட்டியல் கணக்கிட்டுள்ளனர். அதை விடுத்து, இடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்திய பின், 2014 ஆக., 1ன் படி உபரி ஆசிரியர் பட்டியல் தயார் செய்தால், ஆசிரியர்களுக்கு சிரமங்களோ, கலந்தாய்வில் முறைகேடுகளோ இருக்காது,'' என்றார்.

14 comments:

  1. Appo eppathan trb la select anavagaluku posting athayavathu correct da solluga.

    ReplyDelete
    Replies
    1. Dear PG selected Teachers yesterday 24 members go to meet TRB office. They are asked. We have more than 40 cause so that all cause when will completed after we give the final list and appointment . My concussion now we are go to join any private school job.more information call my no 9894772232

      Delete
  2. Appo eppathan trb la select anavagaluku posting athayavathu correct da solluga.

    ReplyDelete
  3. ippothiku posting ila , without getting any information from trb we cant able to know any news

    ReplyDelete
  4. முடியலா........ வரும் ஆனா வராது

    ReplyDelete
  5. appo inum 3 months no GO and no posting augustlayavadhu nadakuma illa adutha tet(2014) kuda serthu posting poduvangala

    ReplyDelete
  6. annaya nadaku Trb LA ooooooo my god
    Tamil nadu tet pass Patna makala kaapathu kadavaleyyyyyyyyy

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Hai History candidate please share your observation if u know that news please call 8438978585

    ReplyDelete
  10. மிகவும் சரியாக கூறினீர்கள் பாரதி மேடம் நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி