பிரதமர் மோடி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2014

பிரதமர் மோடி!!


செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதையகுஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வரவிருக்கும் இவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது.
யார் இந்த நரேந்திர தாமோதர்தாசு மோடி?பள்ளி படிப்பை வட்நகரில் தொடங்கிய நரேந்திர தாமோதர்தாசு மோடி. பள்ளியின் சராசரி மாணவன் தான் ஆனாலும் அவரை பேச்சு போட்டிகளில் வெல்ல ஆளே இல்லை என்பது அவரது ஆசிரியரின் கருத்து.

இன்று வரை அவரது பேச்சுகள்தான அவருக்கு பலமாக இருந்து வந்திருகின்றன.இளம் வயது முதலே அரசியல் ஆர்வம் கொண்ட மோடியின் ஆர்வத்திற்கு வாய்ப்பளித்தது ஆர்.எஸ்.எஸ். அதில்இணைந்து பிரச்சார கூட்டங்களில் குஜராத், இமாச்சலில் தன் சேவையை தொடர்ந்தார்.இடையில் அவரது 18வது வயதில் குழந்தை திருமணம் அதனை விடுத்து இயக்கத்தில் கவனம் என தன் பாதையில் தெளிவாக பயணித்த மோடி 1998ம் ஆண்டு முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா வெற்றிகளுக்கு பிறகு 2001ம் ஆண்டு அக்டோபரில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் ஆனார்.குஜராத் அரசியலில் 2063 நாட்களுக்கு மேல் தொடர்ந்து முதல்வராக இருந்தவர் என்ற பெருமையையும் மோடி தான் வைத்துள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அமெரிக்க விசா மறுப்பு என சர்ச்சைகளில் சிக்கினாலும் பொருளாதரா, தொழில்நுட்ப துறைகளில் குஜராத்தை உயர்த்தி இந்தியாவை குஜராத்தோடு ஒப்பிட வைத்தவரும் மோடி தான்.இவர் மற்ற அரசியல்வாதிகளை போல் இல்லை! ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாயவேலை காட்டி வருகிறார். இவர் அரசியலுக்கு லாயக்கற்றவர், திருமணத்தை மறைத்தவர் என தேர்தலில் பல புகார்கள் முன் வைக்கப்பட்டலும், இவர் தான் பிரதமர் வேட்பாளர் என்றதும் பங்குச்சந்தைகள் பரபரப்பாக தொடங்கின. முடிவுகள் நெருங்கும் போது சென்செக்ஸையும், நிஃப்டியையும் தன் கட்டுபாட்டில் ஆட வைத்தார் இவர்! இன்று வெளியாகி கொண்டிருக்கும் முடிவுகளில் கிட்டத்தட்ட இந்த மனிதர் தான் பிரதமர் ஆவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் இந்தியா வென்றது! நல்ல நாட்கள் முன்னோக்கி உள்ளது என ட்விட்டி இருக்கும் நரேந்திர தாமோதர்தாசு மோடியை இனி இந்தியா பிரதமர் மோடி என்றழைக்க தயாராகி வருகிறது.

5 comments:

  1. Baratha Prathamar Modi Avargal Vazhga Valamudan.

    ReplyDelete
  2. I convey my wishes to PM

    ReplyDelete
  3. HEARTY CONGRATS OUR HONABLE PM ,WE HOPE YOU SAVE THIS VALUABLE NATION. BECAUSE,THIS COUNTRY IS ,*Ramachandramurthi Avatharitha Punniya Desam.* _ S.THAMILSELVAN,PERAVURANI.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி