அரசுப் பள்ளி மாணவர்களை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

அரசுப் பள்ளி மாணவர்களை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள்.


அரசு நடுநிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படித்து, ஒன்பதாம் வகுப்பில் சேர, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை அணுகும்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை காரணம் காட்டி, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 271 அரசு நடுநிலைப் பள்ளிகள் உள்ளது. இம்மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இப்பள்ளிகளில் படித்து ஒன்பதாம் வகுப்பில் பிறபள்ளிகளை தேர்வு செய்து கல்வியை தொடர்கின்றனர்.தற்போது, அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் எளிதில் இடம் கிடைப்பது போல், ஒன்பதாம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்களுக்கு எளிதாக இடம் கிடைப்பதில்லை.

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பெற்றோர்அலைக்கழிக்கப்படும் சூழல் அதிக அளவில் உள்ளது.தற்போது ஆல்-பாஸ் திட்டம் நடைமுறையில் உள்ளதாலும், ஒரு வகுப்பில் குறிப்பிட்டமாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் சேர்க்க அனுமதி இல்லாத காரணத்தாலும் ஒன்பதாம் வகுப்பில் இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.குறிப்பாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை குறிவைத்து செயல்படும் சில அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களை வேண்டுமென்றே முற்றிலுமாக புறக்கணித்துவிடுவதாக புகார் எழுந்துள்ளது.

பெற்றோர் கூறியதாவது: எனது மகள் அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கவுள்ளேன். எனது குடியிருப்புக்கு அருகில் உள்ள சில தனியார் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடம் கேட்டதற்கு, போதிய மரியாதை ஏதும் இன்றி திருப்பி அனுப்பிவிட்டனர். இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் எந்த பள்ளியில் சேர்ப்பதென்றே புரியவில்லை. எங்களை போன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு, அரசு பள்ளிகள் மட்டும்தான் என்றாகிவிட்டது. என் மகள் நன்றாக படித்தும் அரசு பள்ளியில் படித்து வந்தவள் என்பதால் இடம் கிடைக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி