அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகள் மூடல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2014

அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகள் மூடல்.


கோவையில் அங்கீகாரம் இல்லாத 49 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 விதி 18 (1)-ன்படி எந்தவொரு மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியும் அரசின் ஒப்புதல் பெறாமல் நடைபெறக் கூடாது என விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ஒப்புதல் பெறாமல் நடைபெறும் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு இச்சட்டத்தின்படி 3 முறை கேட்பு குறிப்பாணை அனுப்புமாறும், அவ்வாறு குறிப்பாணைஅனுப்பிய பின்னரும் ஒப்புதல் பெறாமல் தொடர்ந்து நடைபெறும் பள்ளிகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள 49 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் ஆரம்பஅங்கீகாரம் மற்றும் அரசின் ஒப்புதலின்றி நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 13 முதல்ஜனவரி வரையுள்ள கால கட்டத்தில் 3 முறை காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், எந்தவொரு பள்ளியும் இதுவரை அங்கீகார கருத்துருவை முழு வடிவில் உரிய ஆவணங்களுடன் அளிக்காததால் அரசின் உத்தரவின்படி கோவை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை செய்து, முதல் கட்டமாக ஆரம்ப அங்கீகாரமின்றி செயல்படும் மற்றும் ஆரம்ப அங்கீகாரம் பெறாததால் தாமாகவே பள்ளியை மூடிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள 49 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.மேலும், இப்பள்ளிகளில் குழந்தைகளை ஏற்கெனவே யாரேனும் சேர்ந்திருந்தால் அவர்களின் மாற்று சான்றுகளை பெற்று அங்கீகாரம் பெற்ற வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் விவரத்தை கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி