பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

துவக்க முதல் மேல்நிலை வரை, அனைத்துப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு, கண்டிப்பாக சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி செய்துதரப்பட வேண்டுமென, சமீபத்தில், சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில், கடந்த கல்வியாண்டில், பள்ளி வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அரசு பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படுவது தெரியவந்தது. அப்பள்ளிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை மூலமாக, போதிய நிதி ஒதுக்கி, கட்டுமானப்பணிகள் நடந்தன. இந்நிலையில், அடுத்தமாதம் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதிகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை உயர் அதிகாரி கூறுகையில்,"பள்ளிகள் துவங்கிய பின், இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அதில் குறைபாடு இருப்பின், உடனடியாக சரி செய்ய, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கப்படும். அனைத்துப்பள்ளிகளிலும், குடிநீர்,கழிப்பறை வசதி செய்துதரப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி