மாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சாட்டிலைட் தகவல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

மாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சாட்டிலைட் தகவல் வெளியீடு




கோலாலம்பூர்: பலியான பயணிகளின் உறவினர்கள் நெருக்கடி காரணமாக, ரகசியமாக வைத்திருந்த மலேசிய விமானத்தின் சாட்டிலைட் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் 8ம் தேதி 239 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இதில் பயணம் செய்தவர்களில் 5 பேர் இந்தியர்கள். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் தகவல் தொடர்பு துண்டித்து மாயமானது. சுமார் ஒன்றரை மாத தேடுதலுக்கு பிறகு, அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. அதில் பயணம் செய்தவர்கள் பலியாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வரும் நிலையில், இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு இந்திய கடல்பகுதியில் விழுந்தது என்பதை உறுதி செய்தது இங்கிலாந்தின் இன்மார்சாட் நிறுவனம்தான்.

அந்நிறுவனம் அளித்த சாட்டிலைட் தகவல்களை மலேசிய அரசு வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது. இதனால், சாட்டிலைட் தகவல்களை மலேசிய அரசு வெளியிட வேண்டுமென பலியான பயணிகளின் உறவினர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தின் இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு நேற்று வெளியிட்டது. 47 பக்கங்கள் கொண்ட அந்த தகவலில் விமானம் சென்ற பாதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி