போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2014

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்.


கோவை மாவட்டத்தில் 1,142 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில்,15 வட்டாரங்களில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் உள்ளனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7 ஆசிரியர்கள் 2010க்கு முன் பணியில் சேர்ந்ததாக பதிவேடு தயாரித்து, பணி நியமனம் முறைகேடு நடந்தது என தகவல் பரவியது. இதையடுத்து, கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை நடத்தி,அந்த அறிக்கையை சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.இதில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததை தொடக்க கல்வி இயக்குனரகம் உறுதி செய்தது. இதையடுத்து, வால்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் காளிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விதியை மீறி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 7 பேரிடமும் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், வால்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் முறைகேடான ஆசிரியர் நியமனத்திற்கு துணை போனது, முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கல்வி அதிகாரியை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி