தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு.


தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு நாட்கள்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்திமலை மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூன் 11ம் தேதி துவங்க இருந்த இரண்டாம் ஆண்டு தேர்வுகள், ஜூன் 26ம் தேதி துவங்கி; ஜூலை 3ம் தேதி முடிகிறது.இதன்படி 26ம்தேதி-இந்திய கல்வி முறை, 27-கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 28- தமிழ் மொழிக்கல்வி, 30- ஆங்கில மொழிக் கல்வி, ஜூலை 1ம் தேதி- கணிதவியல், 2- அறிவியல், 3- சமூக அறிவியல்.ஜூன் 20ம் தேதி நடக்கயிருந்த முதலாண்டு பட்டயத் தேர்வுகள் ஜூலை 7 ம்தேதி துவங்கி; 14ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 7 ம்தேதி- கற்கும் குழந்தை, 8-கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், 9-இளஞ்சிறார் கல்வி மொழிக் கல்வி, 10-கணிதவியல், 11- அறிவியல், 12- சமூக அறிவியல், 14- ஆங்கில மொழிக் கல்வி. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி