சிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: ராஜஸ்தான் அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2014

சிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: ராஜஸ்தான் அரசு


சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த 2012ல் பரிந்துரை செய்தது. தற்போது இந்த பரிந்துரையை அமல்படுத்தராஜஸ்தான் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சிகெரெட் பிடிக்க மாட்டேன், புகையிலை பொருட்கள் எதையும் பயன்படுத்தமாட்டேன் என உறுதிமொழி அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மின் நிறுவனங்களின் இந்த முடிவை, ஜெய்ப்பூரில் உள்ள இனயா பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வரவேற்றுள்ளது.இது குறித்து அதன் தலைவர் நிதிஷா சர்மா கூறுகையில், ‘‘புகையிலை பொருட்கள் உபயோகத்தால் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கேன்சர் பாதிப்பால் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் கேன்சரில் 50 சதவீதமும், பெண்களில் ஏற்படும் கேன்சர் பாதிப்பில் 17 முதல் 20 சதவீதமும் இதனால் ஏற்படுகிறது’’ என்றார்.

2 comments:

  1. இது மிகவும் நல்லது ஏன் இந்தியா முலுவதும் அமுல் செய்யலம் இல்லயா?

    ReplyDelete
  2. super... super..... That is the good decision.I would like to thank RAJESTAN govt.TN govt also applies immediately otherwise our people can't avoid like that.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி