''அ.தி.மு.க., தேர்தல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்றநடவடிக்கை எடுப்பேன்- முதல்வர்ஜெயலலிதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2014

''அ.தி.மு.க., தேர்தல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்றநடவடிக்கை எடுப்பேன்- முதல்வர்ஜெயலலிதா


''அ.தி.மு.க., தேர்தல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்றநடவடிக்கை எடுப்பேன்,'' என, முதல்வர்ஜெயலலிதா தெரிவித்தார்.
நேற்று,ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், 37 தொகுதிகளில், அ.தி.மு.க. முன்னிலை வகிப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களைசந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

அ.தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றியை தந்த, தமிழக மக்களுக்கு, முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, இவ்வெற்றியை பெற்றுள்ளது. அ.தி.மு.க., தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அ.தி.மு.க., தொண்டர் கள், கிளை செயலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், வார்டு மற்றும் வட்டசெயலர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் செயலர்கள், நகர ஒன்றிய செயலர்கள் மற்றும்-நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், லோக்சபா, சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும், கழகத்தின் சார்பு அமைப்பு நிர்வாகிகளுக்கும்,உறுப்பினர்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, வெற்றிக்காக பாடுபட்ட தோழமை கட்சி தலைவர்களுக்கும், அக்கட்சி தொண்டர்களுக்கும்நன்றி.முழுமையான முடிவுகள், இன்னமும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகள் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பது, அனைவருக்கும் தெளிவாகி விட்டதால்,உங்களை சந்திக்கிறேன்.இவ்வாறு,அவர் தெரிவித்தார்.பின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன் விபரம்:

#மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா?அப்படி ஒரு சூழ்நிலை இல்லை.

#லோக்சபாவில் உங்கள் கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கும்?தேர்தல் அறிக்கையில் கூறிஇருப்பதை, நிறைவேற்ற பாடுபடுவோம். தமிழக மக்கள்என் மீதும், அ.தி.மு.க.,மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றபடி நடந்துகொள்வோம். லோக்சபா தேர்தலையொட்டி, அ.தி.மு.க.,சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை யில், எந்த வாக்குறுதிகளை வழங்கியிருந்தோமோ,அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

# எதிர்க்கட்சியாக செயல்படுவீர்களா?உண்மையான முடிவுகள் வரவில்லை. தற்போதுள்ள நிலவரப்படி, தேசிய அளவில், அ.தி.மு.க.,மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. பொறுப்பான அரசியல் கட்சியாக செயல்படுவோம்.

# இவ்வெற்றிக்கு, தமிழகத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்கள் காரணம் என நினைக்கிறீர்களா?நிச்சயமாக. கடந்த, மூன்று ஆண்டுகளாக, பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

சதா சர்வ-காலமும், மக்களைப் பற்றி சிந்திக்கிற இயக்கம் அ.தி.மு.க.,வும், மக்களைப்பற்றி சிந்திக்கிற அரசாக,அ.தி.மு.க., அரசும் திகழ்கிறது. மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அதன் பலன்-மக்களை சென்றடைந்துள்ளது. அதனால், மக்கள் தங்கள் மகிழ்ச்சியை, அங்கீகாரத்தை இந்த தேர்தல் மூலம்-காண்பித்துள்ளனர். என் மீதும், அ.தி.மு.க., மீதும், அளவு கடந்த அன்பை காட்டி உள்ளனர்.

புதிதாக-பொறுப்பேற்க உள்ள ஆட்சிக்கும், புதிய பிரதமருக்கும் வாழ்த்துக்கள். புதிதாக அமையும் அரசு, தமிழகத்துடன் நட்பாக இருக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்தார்.

10 comments:

  1. Amma tet examla pass panuna anaivarukum posting podunga innum 40 years tamilnatla amma atchithan

    ReplyDelete
  2. சீக்கிரம் போஸ்டிங் போடுங்கம்மமமா

    ReplyDelete
  3. Paper 1 vacant evlo increase agum

    ReplyDelete
    Replies
    1. Surely increase because last year paper 1 passed candidates go to next level
      promotion,english medium start,govt. Think startlkg ukg dont worry be happy

      Delete
  4. Amma anaivarukum posting podungama

    ReplyDelete
  5. Amma ungalin aasaiyai niraivettri vittom. Engalin aasai niraivera TRB kku order podungamma.

    ReplyDelete
  6. Pls soon announce trb madam. We showed our trust and love on u pls soon put order for pgtrb we r expecting it

    ReplyDelete
  7. unga vakkuruthila tet candidates pathi yethavathu irrukka ...plz antha mothalla activate pannunga madam....

    ReplyDelete
  8. madam neenga engaluku job kodupinga endra nambikai engalukku iruku, irukindradhu, irnkum.. ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி