SPECIAL TET:சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2014

SPECIAL TET:சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு.


தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கென, தனியாக, சிறப்பு டி.இ.டி., தேர்வை (இரண்டாம் தாள்) நடத்த, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, இத்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும், 39 மையங்களில் நடந்தது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, தேர்வு நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக, கூடுதலாக, ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இதில், பார்வையற்றவர்கள், 1,175 பேரும், இதர குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், 3,301 பேரும் பங்கேற்றனர். தேர்வெழுத பதிவு செய்தவர்களில், 218 பேர், "ஆப்சென்ட்.' தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். சமூக அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட, 94வது கேள்வி மட்டும், பாடத்திற்கு சம்பந்தம் இல்லாததாக இருந்தது என, சிலர் தெரிவித்தனர். நான்கு வகை குறியீடுகளை கொடுத்து, அதை, நான்கு விடைகளுடன் பொருத்துமாறு, கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இந்த கேள்வி, பாடத்தில் வரவில்லை என, பார்வையற்ற தேர்வர்கள் தெரிவித்தனர். விடைத்தாள் திருத்துவதற்கு முன், இந்த விவகாரம் குறித்து, ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர்தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

3 comments:

  1. I am a Physically Challenged woman. I have completed special B.Ed.I missed the chance of TET which was conducted yesterday So, Is there any chance of another special TET exam ?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி