மலிவு விலையில் 'அம்மா' மளிகை : ரூ.1,000க்கு வழங்க பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

மலிவு விலையில் 'அம்மா' மளிகை : ரூ.1,000க்கு வழங்க பரிசீலனை


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், 'அம்மா' மளிகை திட்டத்தை துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
அ.தி.மு.க., அரசால், மலிவு விலை 'அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பஸ் பயணிகள் வசதிக்காக, 10 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட, 'அம்மா' குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு துறை மூலம் பல இடங்களில் மலிவு விலை பண்ணைபசுமை காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இத்திட்டங்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.சமீபத்தில், தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் சார்பில், மலிவு விலையில், 'அம்மா' உப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. விரைவில், 'அம்மா'தேயிலை விற்பனை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என, தெரிகிறது.

ஏற்கனவே, சென்னைமாநகராட்சி பகுதியில், 'அம்மா' வாரச்சந்தை, 'அம்மா' திரையரங்கம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இந்த நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மலிவு விலையில், 'அம்மா' மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஆராய்ச்சியில், அரசு இறங்கியுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.இத்திட்டப்படி, 1,000 ரூபாய்க்கு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், மஞ்சள், தனியா, சீரகம், கடுகு, முந்திரி, வெல்லம்,சர்க்கரை, தேயிலைத் தூள், உப்பு என, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும். முறைகேடுகள் நடக்காமல் இருக்க,இப்பொருட்களை நுகர்வோர் மட்டுமே பிரித்து பார்க்கும் வகையில், பாலிதீன் பைகளால், 'பேக்கிங்' செய்யப்படும்.

ரேஷன் கடைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக, அவற்றை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் துவங்கவுள்ள, 'அம்மா' வார சந்தையில், சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

3 comments:

  1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். மாநிலத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்களை சீரழித்துக்கொண்டிருக்கும், குடிப்பழக்கத்திலிருந்து மீட்க என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது இந்த அரசு. அறிவை வளர்க்க ஊருக்கு ஒரு நூலகத்தை திறக்க முடியாத அரசு, வீதிக்கொரு டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து இளைஞர்களை கூவி கூவி அழைப்பதின் இரகசியம் என்ன….? இலக்கு வைத்து மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் என்ன…. அம்மாவின் சாதனை திட்டங்களில், இதற்கும் அம்மா மதுபானக்கடை என்ற பெயர் வைக்கலாமே, ஏன் செய்யவில்லை……? பொதுவிநியோக கடைகள் கூட மாலை 6.00 மணிக்குள் முடியும்போது, டாஸ்மார்க் கடைகள் மட்டும் இரவு 10 மணிவரை திறந்து வைத்து உழைக்கும் மக்களை கூவி அழைப்பது யாரை வாழ வைப்பதற்கு என்று இந்த அரசு விளக்கம் அளிக்குமா….? இன்று நடந்துகொண்டிருக்கும் பெரும்பாலான கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், 40 சதவிகித சாலைவிபத்துக்கள் போன்றவைக்கு மூலக்காரணம் இந்த மதுபழக்கம்தான் என்பதை மறுக்கமுடியுமா…. அம்மாவின் தாயுள்ளம் இதற்காக பதறியிருக்க வேண்டாமா…..? இலட்சக்கணக்கில் இளைஞர்களையும், உழைக்கும் மக்களையும் குடிகாரர்களாக்கிய பெருமை ஆட்சியில் இதுவரை கோலோச்சிய திராவிட கட்சிகளையே சேரும்.

    ReplyDelete
  2. உதவுங்கள் ....
    மிக மனவேதனைய்யுடன் இதை. பகிர்கிறோம் ....
    நாங்கள். 2000. மேற்பட்ட. பட்டதாரி. ஆசிரியர்கள். கடந்த 2011 டிசம்பர். மாதம் பணியில் சேர்ந்தோம் .....எங்களுக்கு. சான்றிதழ். சரிபார்ப்பு. நவம்பர். 2010 .டிசம்பர். 2010 மற்றும். பிப்பரவரி. 2011 லவ் நடந்தது .....
    எங்களுக்கு. பணி. 2009-2010 காலி பணியிடத்தை. காட்டியும். எங்களை. தேர்ந்தெடுக்க அரசாணை. 152/153 தேதி. 3-06-2010 அன்று. வழங்கப்பட்டுள்ளது ....

    ஆனால் 23-08-2010 க்கு முன்னர் சான்றிதழ். சரிபார்த்தவர்கள் மட்டுமே. TET. லிறுந்து. விளக்கு அளிக்கபட்டுள்ளது்.

    ஆனால் நவம்பர். 2010 ல. சான்றிதழ். சரிபார்க்கப்பட்டு ங செப்டம்பர். ல. பணியமர்த்தப்பட்ட. பல். பேருக்கு. தகுதிகாண் பருவம். முடிக்கபட்டுள்ளது .......ஆனால். எங்களுக்கு. எந்த பயனும் இல்லை ...
    மனவேதனை யுடன் ....இருக்கிறோம் .......
    நாங்கள். என்ன செய்வது ????
    தொடர் பிற்கு. 9962228283
    FB Jaya Venkat....my team (CVS after Aug 2010 appointed teachets)..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி