முப்பருவ கல்வி முறை: திண்டாடும் 10ம் வகுப்பு மாணவர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

முப்பருவ கல்வி முறை: திண்டாடும் 10ம் வகுப்பு மாணவர்கள்.


முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒரே புத்தகத்தை படித்து காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வு எழுதும் வழக்கத்தில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் மாறுதல் செய்யப்பட்டது.புதிய முறைப்படி நான்கு மாதங்களுக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என புத்தகங்களை மூன்றாக பிரித்து, பாடம் நடத்தி தேர்வு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு பருவத்தேர்வும் முடிந்த பிறகு, அவர்கள் படித்த பாடப்புத்தகம், அதன்பின் தேவைப்படுவது இல்லை. அந்த பாடங்களை மாணவ, மாணவியர் மறந்து விடுகின்றனர். அடுத்த பருவத்துக்கான பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.முப்பருவ கல்வி முறையில் படித்து வரும் மாணவ, மாணவியர் அடுத்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை. காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஆண்டு முழுவதும் படித்த மொத்த பாடங்களையும், பொதுத்தேர்வில் எழுத வேண்டும்.முப்பருவ கல்வி முறையில் குறைந்த பாடங்களை மட்டுமே படித்து, தேர்வு எழுதி பழகியமாணவர்கள், ஆண்டு முழுவதும் படித்த பாடங்களை பொதுத்தேர்வின் போது ஒட்டுமொத்தமாகபடிப்பதும், அதற்கான வினாக்களுக்கு பொதுத்தேர்வில் பதில் அளிப்பதும் சிரமத்தை ஏற்படுத்தும்.

இதனால், பல மாணவர்களின் மதிப்பெண் கணிசமாக குறையக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் முப்பருவ தேர்வு முறை இருந்தாலும், மூன்றாம் பருவ தேர்வின்போது மூன்று பருவ பாடங்களையும் மொத்தமாக வைத்தே தேர்வுகள் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் அம்முறை பின்பற்றுவதில்லை. ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், அக்கறை காட்டாமல் உள்ளனர்" என்றனர்.

1 comment:

  1. 9th std wouldnot have tri term syllabus and exams so ultimately the studensts cannot get into full portion scheme.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி