16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் சட்டசபையில் மந்திரி கிம்மனே ரத்னாகர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் சட்டசபையில் மந்திரி கிம்மனே ரத்னாகர் அறிவிப்பு.


16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் கிம்மனே ரத்னாகர் கூறினார்.கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் உறுப்பினர் துகாராம் கேட்ட கேள்விக்கு கல்வி மந்திரி கிம்மனே ரத்னாகர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

16 ஆயிரம் ஆசிரியர்கள்

“மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 28 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதில் 11 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. வருகிற அக்டோபர் மாத இறுதிக்குள் மொத்தம் 16 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதால் தற்காலிகமாக தொடக்க பள்ளிகளில் 9,405 ஆசிரியர்களும் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1,137 ஆசிரியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை இவர்கள் பணியாற்றுவார்கள். ஆசிரியர் காலி பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பும் வகையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பாட புத்தகங்கள்

பி.யு.கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பாட புத்தகங்களும் வழங்கப்படும். 60 சதவீத புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் இந்த புத்தகங்கள் கிடைக்கின்றன. புத்தங்களை விற்பனை செய்பவர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். மீதியுள்ள 40 சதவீத புத்தகங்களை அச்சிடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.நாட்டிலேயே மிக குறைவான விலையில் பாட புத்தங்களை அச்சிட்டு மாணவ-மாணவிகளுக்குவழங்குகிறோம். இது தொடர்பான ஆவணங்களை வெளியிட நான் தயாராக இருக்கிறேன்.

”இவ்வாறு கிம்மனே ரத்னாகர் கூறினார்.கருத்துக

3 comments:

  1. Adhirchiyana seithiya theliva kudangapa,
    Karnadahathil 16000 asiriyargal niyamanam nu thalaipuseithi podungal

    ReplyDelete
  2. Trb go and get idea about selection without strugle from karnataka govt

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி