நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.


இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
தொழில்நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2014–15 கல்வியாண்டுக்கான நேரடி 2–ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியற்கல்லூரியில் வரும் 19–ந்தேதி முதல் ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.வரும் 19–ந்தேதி பி.எஸ்.சி. பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விரும்பும், விளையாட்டுத்துறை மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 20–ந்தேதி கெமிக்கல் டெக்ஸ்டைல், தோல் (லெதர்) மற்றும் அச்சகம் (பிரிண்டிங்) போன்ற பாடப்பிரிவுகளுக்கும், 20–ந்தேதி பிற்பகல் முதல் 22–ந்தேதி வரை சிவில் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு வரும் 23–ந்தேதி முதல் 27–ந்தேதி காலைவரையும், 27–ந்தேதி பிற்பகல் முதல் ஜூலை 2–ந்தேதி வரை எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள www.accet.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண்களில் மாறுதல் ஏதேனும் இருப்பின் கலந்தாய்வு மையத்திற்கு முன்கூட்டிய நாளிலேயே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.

அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லையெனினும் தகுதியுள்ள மாணவர்களும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி