இன்று குரூப் 2ஏ தேர்வு:2,846 பணியிடத்துக்கு 6.32 லட்சம் பேர் போட்டி: கண்காணிக்க பறக்கும்படை அமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

இன்று குரூப் 2ஏ தேர்வு:2,846 பணியிடத்துக்கு 6.32 லட்சம் பேர் போட்டி: கண்காணிக்க பறக்கும்படை அமைப்பு


தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்தும் ‘குரூப் 2ஏ’ தேர்வை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.
முறைகேட்டை தடுக்க கண்காணிக்க துணை கலெக்டர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) ‘குரூப் 2ஏ’ பணியில் 2,846 காலி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை, பிப்ரவரி 6ம் தேதி அறிவித்தது. இதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்கர், தலைமை செயலக நேர்முக எழுத்தர், சட்டப்பேரவை கீழ்நிலை எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர். எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 114 மையங்கள் என 2,217 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கிறது.தேர்வு கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர், பறக்கும் படை அதிகாரிகள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு மையங்களை ஆய்வு செய்ய துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.தொலை தூரங்களில் உள்ள தேர்வு கூடம் மற்றும் பதற்றம் உள்ளவை என கண்டறியப்பட்டுள்ள தேர்வு கூடங்கள் அனைத்தும் ‘வெப் கேமரா’ மூலம் நேரடியாக தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற தேர்வு கூடங்களில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட உள்ளது’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் மூன்று தேர்வு:

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2,800 உதவியாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 எழுத்து தேர்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதே போல் பாரத ஸ்டேட் வங்கிக்கு, இந்திய அளவில் 1,897 புரபேஷனரி ஆபீசர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் இன்று பிற்பகலில் சென்னை உள்பட 14 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இது தவிர கல்லூரி பணியிடங்களுக்கான நெட் தேர்வும் இன்று முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது.இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அதிக சம்பளத்தில் கல்லூரிகளில் பணி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் வங்கி மற்றும் குரூப் 2 தேர்வு, நெட் தேர்வு ஆகிய தேர்வுகள் நடப்பதால் மூன்று தேர்வையும் எப்படி எழுதுவது என தெரியாமல் பட்டதாரிகள் குழப்பம் அடைந்த நிலையில் உள்ளனர்.

சென்னை தேர்வு மையம்:

சென்னையில் 231 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 71,498 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* 10.30 வரை மட்டுமே அனுமதி
* குருப் 2ஏ தேர்வு எழுத உள்ளோர் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:
* தேர்வு கூடத்திற்கு காலை 10.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு முடியும் வரை தேர்வு கூடத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.
* தேர்வு எழுதுவோர் தேர்வு கூடத்திற்கு செல்போன், கால்குலேட்டர், லேப்டாப், புளூடூத் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது.
* மீறுபவர்கள் விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படுவதுடன் தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி