பிளஸ் 2 'ரேங்க்' பட்டியலில் சென்னை மாணவிக்கு 3வது இடம்: மறுமதிப்பீட்டில் 9 மதிப்பெண் கூடியதால் சாதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2014

பிளஸ் 2 'ரேங்க்' பட்டியலில் சென்னை மாணவிக்கு 3வது இடம்: மறுமதிப்பீட்டில் 9 மதிப்பெண் கூடியதால் சாதனை.


பிளஸ் 2 மறுமதிப்பீட்டில், சென்னை, போரூரைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண், 1,191 ஆக உயர்ந்தது.
இதனால், மாநில அளவில், மூன்றாம் இடம் பெற்றமாணவர்கள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த மே 9ம் தேதி வெளியானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி, சுஷாந்தி, 1,193 மதிப்பெண் எடுத்து, மாநில அளவில், முதலிடம் பிடித்தார். தர்மபுரி மாணவி, அலமேலு, 1,192 மதிப்பெண் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார். நாமக்கல் மாணவர், துளசிராஜன், சென்னை, மடிப்பாக்கம் மாணவி, நித்யா ஆகியோர், 1,191 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடம் பிடித்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த பிளஸ் 2 மறுகூட்டலில், சென்னை, போரூர் மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண்ணும், 1,191ஆக உயர்ந்துள்ளது. மதனந்தபுரம், செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியான இவர், தமிழில், 187, ஆங்கிலத்தில், 196, பொருளியலில், 199 மற்றும் வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய, மூன்று பாடங்களில், 200க்கு 200 பெற்றிருந்தார். தமிழில், 9 மதிப்பெண் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதாக, வகுப்பு ஆசிரியர் தெரிவித்ததை தொடர்ந்து, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார்.

இதில், 9 மதிப்பெண் கூடுதலாக கிடைத்தது. இதனால், தமிழ் பாட மதிப்பெண், 196 ஆக உயர்ந்தது. இதன்மூலம், மாநில அளவில், மூன்றாம் இடம் பெற்ற மாணவர் பட்டியலில், நவீனாவும் சேர்ந்து உள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி