வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்! - விகடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2014

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்! - விகடன்






ஸ்ரீஹரிகோட்டா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், 5 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணி 52 நிமிடங்களுக்கு 5 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி 23 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு நேற்று மாலை சென்றார். ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி 52 நிமிடங்களுக்கு தொடங்கியது. விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகள் மோதுவதை தவிர்ப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டதைவிட மூன்று நிமிடங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட், பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட் 7, கனடா நாட்டின் இரண்டு செயற்கைகோள்கள் உள்ளிட்ட 5 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. இதில், பூமியைக் கண்காணிப்பதற்காக ஸ்பாட்-7 செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 714 கிலோ ஆகும். பி.எஸ்.எல்.வி சி23 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட 5 செயற்கைக்கோள்களில் இதுதான் அதிக எடை கொண்டது.

கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக ஜெர்மனி நாட்டின் ஐசாட் செயற்கைக்கோளும், ஜி.பி.எஸ். அமைப்புக்கு உதவும் கனடா நாட்டின் என்.எல்.எஸ். 7.1 மற்றும் என்.எல்.எஸ். 7.2 ஆகிய செயற்கைக்கோள்களும், சென்சார் கருவியுடன் கூடிய சிங்கப்பூர் நாட்டின் வெலாக்ஸ்-1 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன.

ஐசாட் 14 கிலோவும், என்எல்எஸ் 7.1, 7.2 ஆகியவை தலா 15 கிலோவும், வெலாக்ஸ் 7 கிலோவும் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும். பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே வெளிநாடுகளைச் சேர்ந்த 35 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி