பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா? இதோ அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறும் வழிமுறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா? இதோ அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறும் வழிமுறைகள்


அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிற, பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாகவும், தேர்வு மையங்கள் மூலமாகவும் தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த தேர்வர்கள் கடந்த 13–ந்தேதி முதல் www.tndge.in என்ற இணையதள முகவரியில் ‘ஹால்டிக்கெட்’டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

எனினும், சில தேர்வர்கள் தமக்குரிய ‘ஹால்டிக்கெட்’டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என தெரிவித்ததன் காரணமாக, இவ்வாறான தேர்வர்கள் தாங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய பள்ளி அமைந்துள்ள மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகத்தை உடன் தொடர்பு கொண்டு ‘ஹால்டிக்கெட்’டினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்வுக்கட்டணத்தினை பள்ளியில் செலுத்தியதற்கு ஆதாரமாக, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து தேர்வர் தேர்வுக்கட்டணம் செலுத்தியுள்ளார் மற்றும் ஜூன், ஜூலை 2014 பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தகுதியானவர் எனக்கடிதம் பெற்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வர் சமர்பித்த பிறகே ‘ஹால்டிக்கெட்’ வழங்கப்படும்.மேலும் தேர்வர் 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தினை எடுத்து ஒன்றினை ‘ஹால்டிக்கெட்’டில் ஒட்ட வேண்டும். மற்றொடு புகைப்படத்தினை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி